அந்த பாடும் நிலா மீண்டும் பிரகாசிக்கும்..எஸ்பிபிக்காக கலங்கும் நடிகை கஸ்தூரி!

சென்னை: பாடகர் பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டு வருவார் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Recommended Video

பாடகர் SPB விரைவில் குணம் பெற வேண்டும் என பாட்டுப்பாடி உருகும் கவிஞர் வைரமுத்து!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை தெரிவித்தது.

இந்நிலையில் இன்று மாலை வீடியோ வெளியிட்ட அவரது மகன் எஸ்பி சரண், அப்பாவின் உடல் நிலை நேற்று இருந்ததை போன்றுதான் உள்ளது. அவர் வென்டிலேட்டரில்தான் உள்ளார் என்று கூறினார்.

கஸ்தூரி உருக்கம்

கஸ்தூரி உருக்கம்

மேலும் எஸ்பி பாலசுப்ரமணியம் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி கடந்த 15ஆம் தேதி வெளியிட்ட வீடியோவில் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

கஸ்தூரி வேதனை

கஸ்தூரி வேதனை

கொரோனாவுக்கு பிரபல தயாரிப்பாளரான லக்ஷ்மி மூவிஸ் சுவாமிநாதன் பலியானது குறித்து கவலை தெரிவித்தார். அவரது குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும் இந்த வீடியோ மூலம் சுவாமிநாதனின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தார்.

அதில் நம்பிக்கை உள்ளது

அதில் நம்பிக்கை உள்ளது

தொடர்ந்து பேசிய அவர், இன்று என்னுடைய பிரார்த்தனைகள் அனைத்தும் ஒருவருக்கே சென்றடைய வேண்டும். அவர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்ரமணியம். நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

வேத சத்தியம்

வேத சத்தியம்

ஒவ்வொருத்தரும் மனம் உருகி பாலு சாருக்காக வேண்டிக்கொள்வோம். வெற்றி நிச்சயம் வேத சத்தியம் என்று பாடினார். அதேபோல் கொரோனாவை அவர் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். அவருக்காக தமிழ்நாட்டில் உள்ள நடிகர், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

கூட்டுப்பிரார்த்தனை

கூட்டுப்பிரார்த்தனை

இதேபோல் வட இந்தியாவில் இருந்தும் பல பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் எஸ்பிபி சாருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். நம்முடைய கூட்டுப்பிரார்த்தனை அவரை நிச்சயம் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.

கண்கள் கலங்க..

கண்கள் கலங்க..

நாம் அனைவரும் அவருக்காக சேர்ந்து பிரார்த்திப்போம். அந்த பாடும் நிலா மீண்டும் எழுந்து வந்து பிரகாசிக்கும் என நம்புகிறேன் என கண்கள் கலங்க பேசியுள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X