சுசித்ராவின் பெற்றோருக்கு என்ன ஆச்சு தெரியுமா? அவருக்கு உதவி தேவை…கஸ்தூரி பேட்டி!

சென்னை: பாடகி சுசித்ரா, தனது முன்னாள் கணவன் கார்த்திக் குமார், தனுஷ், த்ரிஷா என பல நடிகர்கள் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை மீடியாவில் பேசி புயலை கிளப்பி வருகிறார். இதுகுறித்து பேட்டி அளித்துள்ள நடிகை கஸ்தூரி, சுசித்ராவிற்கு தற்போது மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ ஏதோ ஒன்று அவருக்கு தேவை என்றார்.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் சுசித்ரா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்த நிலையில், சுசி லீக்ஸ் பிரச்சனைக்கு பின், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

Actress kasthuri talks about suchitra controversy speech

பாடகி சுசித்ரா பேட்டி: தற்போது பேட்டி அளித்துள்ள சுசித்ரா, என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினக்சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள்? என்று எனக்கு தெரியும். திருமணமாகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. மேலும், சுசி லீக்ஸ் விஷயத்தில் என்னை பலிகடாவாக ஆக்கிவிட்டார்கள். மேலும், பணத்தைக் கொடுத்து என்னை பற்றி தவறாக பேசி வருகிறார். என்னை பற்றி பேச தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் இருவருமே பயில்வானுக்கு காசு கொடுக்கிறார்கள் என்று பேசி இருந்தார்.

Actress kasthuri talks about suchitra controversy speech

அவருக்கு உதவி தேவை: இதுகுறித்து பேட்டி அளித்துள்ள கஸ்தூரி, இந்த விஷயத்தை பற்றி பேசவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அவங்க பேட்டியை நான் பார்க்கவே இல்ல, பலர் என்னிடம் இதுகுறித்து கேள்வி கேட்டதால் பார்த்தேன். அந்த பேட்டியில், பலர் குறித்து பேசி தேரை இழுத்து தெருவில் விட்டுள்ளார். அவர் மற்றவர் மீது வைத்த குற்றச்சாட்டுக்களை தாண்டி, சிதைந்த ஒரு உள்ளம் உதவிக்காக கூக்குரல் இடுவதுதான் எனக்கு கேட்கிறது. சுசித்ராவிற்கு உடனடியாக ஒரு உதவி தேவைப்படுகிறது. மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ ஏதோ ஒன்று அவருக்கு தேவை. அவருக்கு தன் குறைகளை சொல்லி அதை தீர்த்துக்கொள்ள சரியான நபர் கிடைக்கவில்லை, அதனால் உடனே அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று நான் சொல்லவில்லை.

Actress kasthuri talks about suchitra controversy speech

யாருக்காக இது: அவருடைய குறையை சொல்லி பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டு சாதாரண வாழ்க்கை வாழ வழியை காட்டுவதற்கான ஒரு துணை அவருடன் இல்லை. இதனால் தான் அவர் மீடியாக்களில் பேசுவதற்கு காரணமாக இருக்கிறது. பயில்வான் மீது அவருக்கு உண்மையான கோவம் இருந்தால், கோர்ட், போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது புகார் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், கேமரா முன் அமர்ந்து கொண்டு, நடிகர், நடிகைகளை திட்டுவதால், யார் திருப்தி அடைகிறார் என்று எனக்கு தெரியவில்லை.

Actress kasthuri talks about suchitra controversy speech

ஏதோ பிரச்சனை இருக்கு: மேலும், சுசித்ரா கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொள்ளும் போது, சுசித்ராவிற்கு அம்மா, அப்பா இல்லை அவரின் பெற்றோர் இரண்டு பேருமே தற்கொலை செய்து கொண்டார்கள். இதிலிருந்து அவருடைய குடும்பம் அடிப்படையில் இருந்து ஏதோ ஒரு பிரச்சனையில் இருந்தும் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு சென்றிருக்கிறார்கள். அந்த பிரச்சனையை சரி செய்து வழி காட்ட சுசித்ராவிற்கு சரியான ஆளில்லை என்று கஸ்தூரி ஓப்பனாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X