என்னாச்சு.. (அ)சிங்கப்பெண் எங்க ஓடிட்டாங்க.. வனிதாவை சீண்டிய கஸ்தூரி!

சென்னை: நடிகை வனிதா டிவிட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ள நிலையில் அவரை நக்கலாக சீண்டியுள்ளார் நடிகை கஸ்தூரி.

Recommended Video

Vanitha கு ஒரு நியாயமா, கொந்தளித்த Sanam Shetty

தனது மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்தவர்களை சரமாரியாக விளாசி தள்ளினார் நடிகை வனிதா.

தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த சினிமா பிரபலங்கள் பலரையும் தகாத வார்த்தைகளால் திட்டி அலறவிட்டார்.

கெட்ட வார்த்தைகள்

கெட்ட வார்த்தைகள்

சிலர் மீது போலீஸிலும் புகார் அளித்தார். இதன் உச்சக்கட்டமாக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனுடன் நேர்காணலில் பங்கேற்ற நடிகை வனிதா, அவரை அநாகரீகமாக பேசினார். போடி வாடி என பேசியதோடு சொல்ல முடியாத பல கெட்ட வார்த்தைகளையும் பேசினார்.

லக்ஷ்மி பதிலடி

லக்ஷ்மி பதிலடி

மேலும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என சமூக வலைதள பக்கங்களிலும் ஷேர் செய்து மகிழ்ச்சியடைந்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் அதனை வைரலாக்கினர். அதற்கு பதிலடியாக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் டிவிட்டரில் பதிலடி கொடுத்தார்.

வார்த்தை மோதல்

வார்த்தை மோதல்

லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கருத்து பதிவிட அவரையும் பிடிச்சு விளாசினார் வனிதா. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பெரும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. கஸ்தூரியையும் போடி வாடி என்று பேசியதோடு அநாகரீக வார்த்தைகளையும் பயன்படுத்தினார் வனிதா.

வனிதா ஓட்டம்

வனிதா ஓட்டம்

இந்நிலையில் நடிகை வனிதா சோஷியல் மீடியா மற்றும் மீடியாவில் இருந்து சில காலம் விலகியிருக்கப் போவதாகவும், மேலும் வேலை இருக்கு, இதில் இருப்பதால் கோபம்தான் அதிகமாக வருகிறது என்றும் தெரிவித்து டிவிட்டர் அக்கவுண்டை டிஆக்டிவேட் செய்துவிட்டார்.

(அ)சிங்கப்பெண் ஓடிட்டாங்க?

(அ)சிங்கப்பெண் ஓடிட்டாங்க?

இதனை பார்த்த நடிகை கஸ்தூரி, என்னாச்சு? (அ)சிங்கப்பெண் எங்க ஓடிட்டாங்க.. ஏதாவது காக்காவை பார்த்து பயமா அல்லது உண்மையை பார்த்து பயமா? இப்போது உங்களுக்கு தெரியும். நீங்கள் தான் பிக்கஸ்ட் பாஸஸ் யார் தைரியமானவர் யார் காமெடி பீஸ் என தீர்மானிப்பதற்கு என பதிவிட்டுள்ளார்.

ஸ்க்ரீன் ஷாட்

ஸ்க்ரீன் ஷாட்

மேலும் விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இமேஜை ஷேர் செய்து என்ன ஆச்சு? என கேப்ஷன் கொடுத்துள்ளார். மறு பக்கம் வனிதா விஜயக்குமார் அக்கவுண்ட் இல்லாததையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X