ஒரு கேமரா கன்டென்டுக்கே ஊரே அலறிடுச்சு.. சுச்சி லீக்ஸை சொல்லி சுசித்ராவை சீண்டிய பிரபல நடிகை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகை சுசித்ரா வர இருப்பதை பிரபல நடிகை கிண்டலடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் 16 போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்து உள்ளே அனுப்பி வைத்தார் நடிகர் கமல்ஹாசன்.

அதன்பிறகு பிரபல விஜேவான அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

மேலும் ஒரு பிரபலம்

மேலும் ஒரு பிரபலம்

இந்நிலையில் கடந்த வார இறுதியில் பிக்பாஸ் போட்டியாளரான ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட்டானார். இதனை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலத்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக கொண்டு வர பிக்பாஸ் நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளது.

கஸ்தூரி கிண்டல்

கஸ்தூரி கிண்டல்

அதன்படி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் வரவுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வருகின்றது. இந்நிலையில் சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதை பிரபல நடிகையான கஸ்தூரி கிண்டலடித்துள்ளார். அவரது சுச்சி லீக்ஸ் சம்பவத்தை குறிப்பிட்டு டிவிட்டியிருக்கிறார் கஸ்தூரி.

ஊரே அலறுச்சு..

ஊரே அலறுச்சு..

இதுதொடர்பாக கஸ்தூரி டிவிட்டியிருப்பதாவது, சுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமரா கன்டென்ட்டுக்கே ஊரே அலறிச்சு... இங்கே 100 கேமெரா ! ஹவுஸ்மேட்ஸ் கண்டிப்பா சோஷியல் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க! என குறிப்பிட்டுள்ளார்.

அந்தரங்க வீடியோக்கள்

அந்தரங்க வீடியோக்கள்

பிரபல பாடகி, ஆர்ஜே, விஜே, நடிகை என பல முகங்களை கொண்ட சுசித்ரா, சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் திரை பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார். இதனால் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்வாண வீடியோக்கள்

நிர்வாண வீடியோக்கள்

இதில் பல இளம் நடிகைகளின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் பலரின் படுக்கையறை காட்சிகள், லிப்லாக் போன்றவை இடம் பெற்றிருந்தன. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று விளக்கமளித்தார் சுசித்ரா.

கன்டென்டுக்கு பஞ்சமிருக்காது

கன்டென்டுக்கு பஞ்சமிருக்காது

எந்த விஷயத்தையும் பட்டென பேசும் சுசித்ரா சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சுசித்ரா என்ட்ரி கொடுத்தால் கன்டென்ட்டுக்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில் சுச்சி லீக்ஸ் போல பிக்பாஸ் வீட்டில் இருந்து எந்த வீடியோவையாவது வெளியிட்டு விடுவார் என மறைமுக கேலி செய்துள்ளார் கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X