எல்லோரும் தயங்கிய போது நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள்.. பாரதிராஜாவுக்கு நன்றி கூறிய பிரபல நடிகை!

சென்னை: எல்லோரும் தயங்கிய போது நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள் என இயக்குநர் பாரதி ராஜாவுக்கு நடிகை கஸ்தூரி நன்றி கூறியுள்ளார்.

நடிகை மீரா மிதுன் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா குறித்து தகாத வார்த்தைகளை பேசி வருகிறார். அவர்கள் குறித்து தொடர்ந்து வீடியோக்களையும் டிவீட்டுக்களையும் பதிவிட்டு வருகிறார்.

அவர்களின் மனைவிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார். இதனால் கடுப்பான நடிகர்களின் ரசிகர்கள் நடிகை மீரா மிதுனையும் எல்லை மீறி திட்டி வருகின்றனர்.

வரம்பு மீறி பேசி வருகிறார்

வரம்பு மீறி பேசி வருகிறார்

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜா மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். மேலும் அழகிய ஒவியத்தின் மீது சேறடிப்பது போல் மீரா மிதுன் வரம்பு மீறி பேசி வருகிறார் என்றும் சாடினார்.

நடிகை கஸ்தூரியின் பெயர்

நடிகை கஸ்தூரியின் பெயர்

மேலும் உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்களும் திரைத்துறையை சேர்ந்தவர்களை ஆபாசமாக பேசுவது குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் இயக்குநர் பாரதிராஜா. நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர் என அஜித் ரசிகர்கள் அவதூறாக பேசியதை மறைமுகமாக கூறினார் பாரதிராஜா.

உங்களின் கடமை

உங்களின் கடமை

ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள் நமக்கென்ன என நட்சத்திரங்கள் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்றும் கண்டித்தார். அவர்களை நல்வழிப்படுத்த ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட என்றார்.

அடுப்படியில் நாறுகிறது

அடுப்படியில் நாறுகிறது

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படிக்கவே கூசும் அளவுக்கு கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகர்கள் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறார்கள், பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது என்றார்.

நன்றி ஐயா..

இதனை பார்த்த நடிகை கஸ்தூரி இயக்குநர் பாரதிராஜாவுக்கு நன்றி கூறியுள்ளார். எல்லோரும் இதைப்பற்றி பேச தயங்கியபோது, நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள். என்னைப் போன்ற பலருக்கு தோள் கொடுத்துள்ளீர்கள். நன்றி இயக்குநர் இமயம் பாரதிராஜா ஐயா. இந்த தருணத்திலிருந்து, திரைப்பட சகோதரத்துவத்தையும் நடிகர்களையும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஒன்றிணைக்க இதய ஆன்மாவையும் நேரத்தையும் ஒதுக்குவேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X