kasthuri tweet: உண்டியல்ல இருந்து கைய எடுங்க.. உதயநிதியை சீண்டிய கஸ்தூரி!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்தான பேச்சு பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடிகை கஸ்தூரியும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்,
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா நோய்களை ஒழிப்பது போல, சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்

உண்டியல்ல இருந்து கைய எடுங்க: இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே...அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி. அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க என உதயநிதியை கடுமையாக விமர்த்துள்ளார்.
ட்விட்டரில் ஆக்டிவ்: இவரின் இந்த கருத்தை கண்டித்து பலரும் கஸ்தூரிக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் டிவி சேனல்களில் விவாத நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று துணிச்சலாக பதில் அளிப்பதை வாடிக்கையாகவே வைத்து இருக்கிறார்.
பல படங்களில்: ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகை கஸ்தூரி சின்னவர், புதிய முகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அமைதிப்படை மற்றும் இந்தியன் ஆகிய படங்கள் கஸ்தூரிக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. அண்மையில் இவர் தமிழ் 2 படத்தில் இடம் பெற்ற குத்துவிளக்கு குத்துவிளக்கு பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











