டியர் விவேக்… சட்டுபுட்டுனு குணமாகி… சீக்கிரம் எழுந்துவாங்க… கஸ்தூரி ட்விட்!
சென்னை : நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
நடிகர் விவேக் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சின்ன கலைவாணர்
திரைப்படங்களை நகைச்சுவையாகக் கொண்டு செல்லாமல் சமூக அக்கறை உள்ள கருத்துகளை நகைச்சுவை மூலம் மக்களிடையே கொண்டு சென்றவர் விவேக். அவரை தமிழக மக்கள் சின்ன கலைவாணர் என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.

கொரோனா
அப்துல் கலாம் மீது தீராத காதல் கொண்ட இவர், மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழக அரசின் டெங்கு விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு, தடுப்பூசி விழிப்புணர்வுக்குப் பிரசாரம் செய்தார் விவேக்.

எக்மோ சிகிச்சை
இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. அதே நேரம் விவேக்கின் இதயச் செயல்பாட்டை அதிகரிக்க எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீக்கிரம் எழுந்துவாங்க
நடிகர் விவேக் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் சமூகவலைத்தள பக்கத்தில் பல ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதே போல நடிகை கஸ்தூரி, நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு என்ற மோசான செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். டியர் விவேக் சட்டுபுட்டுனு,குணமாகி சீக்கிரம் எழுந்துவாங்க என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











