அடுத்த விக்கெட்டு.. எல்லாம் அந்தக் கட்சியிலதான் சேருவாங்க போல.. மநீம குறித்து பிரபல நடிகை ஆருடம்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து நடிகை கஸ்தூரி தனது கணிப்பை பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது.
ஆனால் இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெறவில்லை. மேலும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனே படு தோல்வியடைந்தார்.

தொடரும் விலகல்
இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு அக்கட்சியில் இருந்து ஒவ்வொருவராய் விலகி வருகின்றனர். துணைத் தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், சந்தோஷ் பாபு ஐஏஎஸ், பத்மபிரியா ஆகியோர் விலகினர்.

இன்று ஒருவர்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்த எம் முருகானந்தம் நேற்று கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் அறிவித்து உள்ளார்.

பேசு பொருளான மநீம
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் கமலின் தன்னிச்சையான முடிவுகள், சர்வாதிகார போக்கே கட்சியின் தோல்விக்கு காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர். தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய தலைகள் விலகுவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

அடுத்த விக்கெட்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஒவ்வொருவரும் விலகும் போதும் அதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி இன்று குமரவேல் விலகல் குறித்து டிவிட்டியுள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், அடுத்த விக்கெட்டு... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சிகே குமரவேல் விலகியுள்ளார். ஆலோசகர்கள் மற்றும் கமலின் சுயநல அணுகுமுறை என குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த கட்சியில் இணைவார்கள்
மாற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மையின் ஒரு சாம்பியனாக இருந்து, அவர் இப்போது 'மதச்சார்பற்ற' அரசியலைப் பற்றி பேசுகிறார்- எனது யூகம் மய்யத்தில் இருந்து விலகும் நண்பர்கள் திமுகவில் இணைந்து விடுவார்கள் போல என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











