twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிகில்.. 18 புள்ளீங்கோ கைது.. அரசையும் போலீஸையும் பாராட்டிய நடிகை.. ஆனாலும் ஒரு இக்கு!

    |

    Recommended Video

    Bigg Boss Kasthuri Bed Room Selfie : கஸ்தூரி வெளியிட்டுள்ள படுக்கையறை செல்ஃபி-வீடியோ

    சென்னை: பிகில் படம் விவகாரத்தில் கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டதற்கு நடிகை கஸ்தூரி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

    விஜய் நடிப்பில் உருவான பிகில் படம் கடந்த 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸானது. காலை 5 மணி காட்சியை முன்கூட்டியே நள்ளிரவு ஒரு மணிக்கு ஒளிபரப்பக்கோரி விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த கடைகள் மற்றும் வாகனங்களையும் விஜய் ரசிகர்கள் சூறையாடினர். கிருஷ்ணகிரி ரவுண்டான பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், சிக்னல் பல்புகள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தினர்.

    தொகுப்பாளினியின் திரை பயணத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட் - பூஜா ராமசந்திரன்தொகுப்பாளினியின் திரை பயணத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட் - பூஜா ராமசந்திரன்

    32 பேர் கைது

    32 பேர் கைது

    இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 32 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

    இதுவரை 50 பேர்

    இதுவரை 50 பேர்

    இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேலும், 7 சிறுவர்கள் உள்பட 18 பேரை கைது செய்த போலீசார் அவர்களையும் சிறையில் அடைத்தனர். இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மற்ற ரசிகர்கள் மீதும்?

    மற்ற ரசிகர்கள் மீதும்?

    ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டதற்கு நடிகை கஸ்தூரி பாராட்டு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அரசின் இந்த பொறுப்புணர்ச்சி இது போன்ற செயல்களில் ஈடுபடும் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மீதும் வெளிப்படுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சந்தோஷம்தான்

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அரசாங்கமும் போலீசும் தவறு செய்தவர்கள் மீது அதிவேக நடவடிக்கை எடுப்பதை பாராட்டியே தீரவேண்டும். இந்த பொறுப்புணர்ச்சி விஜய் மட்டுமில்லாமல் யார் நடித்த படம் ரிலீஸ் ஆனாலும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாமா? அரசின் பழிதீர்க்கும் நடவடிக்கையாக இல்லாமல் அரசின் பொறுப்புணர்ச்சியாக இருந்தால் சந்தோஷம்தான் என்றும் கஸ்தூரி தனது டிவிட்டில் தெரிவித்திருக்கிறார்.

    English summary
    Actress Kasthuri welcomes for arresting Vijay fans who committed violence in Kirshnagiri. She says Happy if the government exhibits responsibility not political vendetta.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X