"குழந்தைகளுக்காக ஒன்றாக இருங்கள்"… நடிகை கஸ்தூரி ட்வீட் !

சென்னை : தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு விவகாரம் இணையத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.

நட்சத்திர தம்பதிகளின் இந்த திடீர் முடிவு குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தனுஷ்

தனுஷ்

ரஜினியின் மூத்த மருமகன் தனுஷ். ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். தனுஷின் திறமைகளை பார்த்து ரஜினியே அவ்வப்போது சிலாகித்தது உண்டு. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமண உறவு விவாகரத்தில் முடிந்தபோது கூட தனுஷ் மீது அலாதி பாசம் வைத்திருந்தார் ரஜினி.

ரஜினி அதிர்ச்சி

ரஜினி அதிர்ச்சி

தனுஷ் அடுத்தடுத்து வளர, அவரே தடமாக மாறினார்.சமீபத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் இயக்க போவதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்துள்ளது பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மகிழ்ச்சியான குடும்பம்

மகிழ்ச்சியான குடும்பம்

தனுஷ் பற்றி பல கிசுகிசுக்கள் இணையத்தில் பரவிய போதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகவே இருந்தனர். அதே போல ஹாலிவுட் படமான தி கிரேக் மேன் திரைப்படத்தில் நடிப்பதற்காக தனுஷ் அமெரிக்கா சென்ற போதும் தனது மனைவி மற்றும் இருமகன்களுடன் கிட்டத்தட்ட 3 மாதம் மகிழ்ச்சியாக இருந்தார். இந்த புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வெளியாகின.

இதுதான் காரணமா ?

இதுதான் காரணமா ?

தனுஷ் தற்போது போயஸ் கார்டனில் ஒரு வீட்டை கட்டி வருகிறார். இந்த வீட்டின் பணிகள் நவம்பர் மாதமே முடிவடைய வேண்டியதாம், ஆனால், பணப்பிரச்சினை காரணமாக வீட்டு வேலை இன்னும் முழுமை அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தனுஷுக்கு பணபிரச்சினை ஏற்பட்டதாகவும் இதில் ரஜினி உதவ முன்வரவில்லை என்றும் இது தான் குடும்பத்திற்குள் புயலை கிளப்பியதாகவும் கூறப்படுகிறது.

Recommended Video

Dhanush & Aishwarya Separation | Aishwarya போட்ட Tweet - இந்த பிரிவு தேவை | Filmibeat Tamil
கஸ்தூரி ட்விட்

கஸ்தூரி ட்விட்

இந்நிலையில், நடிகை கஸ்தூரி, தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு முடிவு குறித்து தனது ட்விட்டரில் கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், விவாகரத்து என்பது பெற்றோருக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கும், ஆனால், குழந்தைகளுக்கு அது தவறாகும். "குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக இருங்கள்" என்று பெரியவர்கள் முன்பே சரியாகச் சொன்னார்கள். ஓரு குடும்பத்தில் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். என நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X