முட்டி வரை சாக்கடை தண்ணி.. மழை ரசிகைக்கு சமர்ப்பணம்.. ஷர்மிளாவை வம்புக்கு இழுத்த கஸ்தூரி!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால், பல்வேறு மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும், இன்னும் சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்தது. அதிலும் செவ்வாய்கிழமை காலை நகரின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

தேங்கிய மழைநீரை அகற்றுவதற்காக தமிழக அரசின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் பணிகளை செய்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அரசியல் தலைவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.அதே போல சென்னையில் பெரும்பாலான இடத்தில் மழை நீர் தேங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

kasturi sharmila rain

தேங்கிய மழை நீர்: இதையடுத்து சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரிக்கும், ஷர்மிளாவுக்கும் இடையே வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது, நடிகை ஷர்மிளா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது.முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க, ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க. நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும. ஏதோ சொல்லணும்னு தோணிச்சு... சொன்னேன்" என்று பதிவிட்டு இருந்தார்.

கஸ்தூரி ட்வீட்: இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது.எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்" என்று பதில் அளித்திருந்தார். இவரின் இந்த பதிவு இணையத்தில் பேசு பொருளானதைத் தொடர்ந்து பலரும் இணையத்தில் கஸ்தூரியை விமர்சித்தனர். அதில் ஒருவர், பொய் சொல்லாத தாய் கிழவி உங்க வீட்டு முன்னாடி தான் நிக்கிறேன், ஒரு சொட்டு தண்ணி இல்லை என வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

kasturi sharmila rain

மழை ரசிகை: இதற்கு பதிலடி கொடுத்து இருக்கும் நடிகை கஸ்தூரி, பொய் சொல்லி பிழைக்கும் பொதுப்பயலே. நீ என்ன ரோட்டுல நின்னு திறமையா வீடியோ எடுத்தாலும் உள்ளே தேங்கின தண்ணிய மறைக்க முடியலையே. எங்கே, என் வீட்டுக்கு கால் நனையாமல் வந்துரு பார்ப்போம்? உன் புரட்டை நம்பி வீடியோவெல்லாம் விட்டவங்க மானத்தை வாங்கிட்டயே என்று,அக்டோபர் 16ந் தேதி 3 மணி அளவில் என் வீட்டு நிலமை. பொய்யை பரப்பி கொக்கரித்த ப்ரோக்கர் பயலுகளுக்கும், மழை ரசிகைக்கும் 200 ரூபாய்க்கு மொத்தத்தையும் அடகு வைத்த திராவிடிய கும்பலுக்கும் சமர்ப்பணம் என பதிவிட்டுள்ளார். கஸ்தூரி நடிகை ஷர்மிளாவை விமர்சித்து ட்வீட் போட்ட போதும், அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை இருந்தும், கஸ்தூரி மீண்டும் மழை ரசிகை என சொல்லி அவரை வம்புக்கு இழுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X