Just In
- 38 min ago
கொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா? டிரெண்டாகும் #Thalapathy65
- 1 hr ago
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- 1 hr ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 1 hr ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
Don't Miss!
- News
திணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்!
- Finance
கொரோனா-வின் வெறியாட்டம்.. 22.5 கோடி பேர் வேலையை இழந்து தவிப்பு..!
- Sports
கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட திட்டம்.. மூத்த வீரர் அஸ்வினுக்கு செக் வைக்கும் கோலி? என்ன நடக்கிறது?
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆபாசமான கமெண்ட்ஸ்.. அஜித் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க? நடிகை கஸ்தூரி காட்டம்!
சென்னை: நடிகை கஸ்தூரி குறித்து, தொடர்ந்து அஜித் ரசிகர்கள் ஆபாசமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருவதாக ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்களுடன் கஸ்தூரி புகார் அளித்துள்ளார்.
அமைதிப்படை, இந்தியன், செந்தமிழ் பாட்டு, தமிழ் படம் 2 மற்றும் சமீபத்தில் வெளியான வெல்வெட் நகரம் என பல படங்களில் நடித்துள்ளார் கஸ்தூரி.
அரசியல் ரீதியாகவும் சமீப காலமாக ட்வீட்களை போட்டு, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார்.
|
ஆபாசமான கமெண்ட்ஸ்
நடிகை கஸ்தூரி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதால், பல பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது ட்வீட் போட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை கஸ்தூரி குறித்து, அஜித் ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் சிலர் மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர். தற்போது, அதன் ஸ்க்ரீன்ஷாட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

அஜித் சார்
மேலும், தனது ட்வீட்டில், அஜித் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க? உங்க ரசிகர்கள் இப்படி கேவலமா ஆபாசமா பேசுவதை கண்டிக்க மாட்டீங்களா? என பதிவிட்டுள்ளார். மேலும், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமும், இதனை தடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
|
அவளால என்ன பண்ண முடியும்
சுரேஷ் சந்திரா சார் நீங்க, இந்த விஷயத்தை கண்டும் காணாத மாதிரி இருப்பது, அவளால என்ன பண்ண முடியும், கதறுவதை தவிர என்ற திமிர் எங்கே இருந்து வந்தது. உங்கள் மெளனத்தில் இருந்து வந்தது? என்று பதிவிட்ட கஸ்தூரி, தமிழ்நாடு போலீஸ், இந்த ஸ்க்ரீன் ஷாட் பதிவுகளை புகாராக அளிக்கிறேன். நீங்களாவது நடவடிக்கை எடுங்க என்றுள்ளார்.
|
ஆனாலும் திருந்தவில்லை
"ஏற்கனவே இந்த நாயின் ஒரு அக்கௌன்ட் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் திருந்தவில்லை. வவுனியா மற்றும் ஈழத்து சொந்தங்களே, உங்களுக்கு இந்த அற்பன் யாரென்று தெரிந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்." என்றும் மற்றொரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி மனம் நொந்து பதிவிட்டுள்ளார்.
|
வளர்ப்பு அப்படி
"அவங்க அம்மா அவனுங்கள வளர்த்து இருக்குற விதம் அவ்ளோதான் மேடம்.. இவனுங்க கூடலாம் சண்ட போட்டு , உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க" என இந்த ரசிகர், கஸ்தூரியின் கோபத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், அஜித் ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் சிலர், இந்த புகார் பதிவுக்கு கீழும் ஆபாச கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
|
ரொம்ப மோசம்
ஏற்கனவே #DirtyAjithFans என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் மற்றும் தல அஜித்துக்கு கெட்ட பெயர் வரும்படி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் கஸ்தூரி. நடிகர் அஜித், எந்தவொரு சோஷியல் மீடியா ஐடிக்கும் சப்போர்ட் செய்யவில்லை என்பதை தெரிவித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் மீண்டும் அஜித் போட்டோ டிபியை வைத்துக் கொண்டு ஆபாசமாக கமெண்ட் செய்து வருவது மிகவும் மோசமான விஷயம்.

கண்டிப்பாரா?
தனது பெயரில் போலி கையெழுத்து வெளியானதும், உடனடியாக அறிக்கை விட்ட நடிகர் அஜித், நடிகை கஸ்தூரியின், இந்த நேரடி புகார்களுக்கு, செவி சாய்த்து, தனது ரசிகர்களுக்கு ஒரு கண்டன அறிக்கை வெளியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக தயாரிப்பாளர் போனி கபூரையும் மிகவும் ஆபாசமாக திட்டி தீர்த்தது குறிப்பிடத்தக்கது.