Kasturi: சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ்.. காத்திருந்து ஜோதிகாவை அட்டாக் செய்த கஸ்தூரி.. செம தெளிவுதான்!
சென்னை: நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படம் நேற்று அதாவது மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராணன் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், நடிகை கஸ்தூரி, சூர்யாவின் ரெட்ரோ படம் குறித்தும் நடிகை ஜோதிகா குறித்தும் பெயர்களைக் குறிப்பிடாமல் அட்டாக் செய்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் விருது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நடிகை ஜோதிகா, நாம் கோவிலுக்கு செலவு செய்வதை விட பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யுங்கள் என்று பேசியிருந்தார். அதாவது அவர் பேசும்போது, " தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. ஒரு முறை படப்பிடிப்புக்காக சென்றபோது அழகாக இருக்கும், கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று படக்குழுவினர் சொன்னார்கள்.
அந்த கோவிலுக்கு நான் ஏற்கனவே சென்றுள்ளேன். உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி தஞ்சை கோவில் உள்ளது. தஞ்சையில் எனக்கு படப்பிடிப்பு அங்குள்ள மருத்துவமனையில் இருந்தது. மருத்துவமனைக்கு சென்றபோது அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததை பார்த்தேன். நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது.கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே அளவுக்கான தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். இவை மிகவும் முக்கியம். ராட்சசி படத்தில் இயக்குநர் கௌதம் ராஜும் சொல்லியிருக்கிறார், நானும் அதைத்தான் சொல்கிறேன்.

அட்டாக்: மருத்துவமனையை பார்த்த பிறகு நான் கோவிலுக்கு போகவில்லை. பள்ளிகளும் மருத்துவமனைகளும் தான் முக்கியம். கோவில்களுக்கு செலவு செய்வது உண்டியலில் காசு போடுவதைவிட பள்ளிகள் மருத்துவமனைகள் பராமரிக்க பணம் கொடுங்கள் என்று மிகவும் தெளிவாகவும் முற்போக்காகவும் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு ஒரு புறம் எதிர்ப்பு கிளம்ப, மறுபுறம் பாராட்டுகளும் ஆதரவும் கிடைத்தது. ஜோதிகா இப்படி பேசிய பின்னர், அவரது கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் அவரை அவ்வப்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் சீண்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.
கஸ்தூரி: அப்படியான ஒரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது. அதாவது சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு உள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில், " கோவிலுக்கு பதில் ஆஸ்பத்திரி என்பதை விட .... சில சினிமாவுக்கு பதில் அந்த பட்ஜெட்டை நல்ல காரியத்துக்கு பயன்படுத்தலாமே." என பதிவிட்டுள்ளார்.

பதிலடி: இவரது இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள 'கோயிலுக்கு பதில் ஆஸ்பத்திரி என்பதை விட ' என்ற வார்த்தைகள் ஜோதிகாவை அட்டாக் செய்வதைப் போல உள்ளது என்றும், 'சில சினிமாவுக்கு பதில் அந்த பட்ஜெட்டை நல்ல காரியத்துக்கு பயன்படுத்தலாமே' என்ற வார்த்தைகள் சூர்யாவின் ரெட்ரோ படத்தை அட்டாக் செய்வதைப் போலவும் உள்ளதாக இணையவாசிகள் பேசி வருகிறார்கள். அதேநேரத்தில் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் ஐந்து ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளார், நல்ல காரியங்கள் செய்வது குறித்து யாரும் அவருக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை என்றும் பதிலடி வழங்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











