“மகான்“ படத்தை மோசமாக விமர்சித்த கஸ்தூரி… கடுப்பான ரசிகர்கள் !

சென்னை : பிரபல நடிகை கஸ்தூரி மகான் திரைப்படத்தை மோசமாக விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் மகான்.

இத்திரைப்படம் கடந்த பிப். 10ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

மகான்

மகான்

காந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் குடும்பத்தில் பிறந்தவர் விக்ரம். அவருக்கு காந்தி மகான் என பெயர் வைத்து, சிறுவயது முதலே மது ஒழிப்பு, அகிம்சை உள்ளிட்ட காந்தியக் கொள்கைகள் புகுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறார். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் விக்ரமின் மனைவி சிம்ரனும் தீவிரகாந்திய கொள்கைகளை கடைப்பிடிப்பவராக இருக்கிறார்.

பிடித்த வாழ்க்கை

பிடித்த வாழ்க்கை

எந்தவித பிடிப்பும் இல்லாமல் போய்க் கொண்டிருக்குறது விக்ரமின் வாழ்க்கை, ஓரே ஒரு நாள் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார். மது, சீட்டு, ஆட்டம் பாட்டம் என ஒரே நாளில் அனைத்தையும் அனுபவிக்கிறார். ஆனால், அந்த ஒரு நாள் விக்ரமின் வாழ்க்கையை அடியோடு மாற்றி தலைகீழாக மாறிவிடுகிறது. மனைவி, மகனை பிரிந்து நண்பனுடன் இணைந்து மதுபானம் தயாரித்து மிகப்பெரிய தொழிலதிபராக மாறுகிறார்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

படம் முழுக்க விக்ரமின் ராஜ்ஜியம் தான், ஒற்றை ஆளாக படம் முழுக்க தன்னுடைய அட்டகாசமான நடிப்பினாலும், நுணுக்கமான உடல்மொழிகளாலும் நின்று மிரட்டி உள்ளார்.அதேபோல, துருவ் விக்ரம். ஆதித்ய வர்மாவில் பார்த்ததைப் போலவே படம் முழுக்க இதிலும் விறைப்பாகவே வருகிறார். பல காட்சிகளில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் துருவ். அப்பா மகன் இணைந்து நடித்துள்ள இப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மோசமான விமர்சனம்

மோசமான விமர்சனம்

இந்நிலையில், பிரபல நடிகை கஸ்தூரி ,தனது ட்விட்டர் பக்கத்தில், அப்பா, மகன் இணைந்து நடித்தால் படங்கள் ஓடாது என்பதற்கு மகான் படமும் ஒரு உதாரணமாகிவிட்டது. நிஜ அப்பா, மகன் இணைந்து நடித்து ஹிட்டான திரைப்படங்களை சொல்லுங்கள்? என மகான் படம் குறித்து மோசமான கருத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த பல ரசிகர்கள் உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் அது மோசமான படமாகிவிடுமா என கேட்டு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X