Kasthuri: வெறும் வாய்க்கு அவல் கொடுத்த கஸ்தூரி.. கமெண்ட் எல்லாம் இப்படி கன்னா பின்னாவென இருக்கே!

சென்னை: அரசியல். சினிமா, சமூக கருத்து என எதுவாக இருந்தாலும், அனைத்தையும் துணிச்சலாக பேச கூடியவர் நடிகை கஸ்தூரி. அடுத்தடுத்து, சின்னத்திரை, சினிமா என பிஸியாக நடித்து வரும் கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார், அந்த கேள்விக்கு ரசிகர்கள் என்ன பதில் அளித்து வருகிறார்கள் என்று பாருங்கள்..

ஆத்தா உன் கோயிலிலே படத்தில் ஹீரோயினாக அறிமுகமான கஸ்தூரி, அதே ஆண்டில் தொடர்ந்து, இரண்டு படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறி கஸ்தூரி, சத்யராஜ், பிரபு, சரத்குமார், விஜயகாந்த் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடித்தார். சத்யராஜுடன் சேர்ந்து அமைதிப்படை படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தற்போது வரை பேசும் படமாகவே இருக்கிறது.

actress kasturi photos

நடிகை கஸ்தூரி: பிஸியாக நடித்து வந்த கஸ்தூரி ரவிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். இவர்களுக்கு, சோபின் ரவிகுமார் மற்றும் சங்கல்ப் ரவிகுமார் என ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தைகள் வளர்ந்த பிறகு 2009 ஆம் ஆண்டு வெளியான மிர்ச்சி சிவா நடித்த 'தமிழ் படம்' படத்தில் 'குத்து விளக்கு' பாடலில் கிளாமராக நடனமாடி ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின் அம்மா, அக்கா, அண்ணி என துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

actress kasturi photos

சர்ச்சை கருத்தால் வந்த வினை: சமூக வலைதளங்களில் மட்டுமில்லாமல், அரசியல் களத்திலும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அரசியல் கட்சிகளையும், அரசியல் கட்சி பிரமுகர்களையும் விமர்சித்து வருகிறார். எந்த சமூக பிரச்சனை வந்தாலும், அது குறித்து பேசி வைரலாவதும் அவரது வழக்கம். அந்த வகையில் நவம்பர் மாதம் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக கண்டன குரல்களும் எழுந்த நிலையில் கஸ்தூரி கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுதலை ஆனார்..

actress kasturi photos

நான் எப்படி இருக்கிறேன்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, தனது குழந்தைகளுடன் அடிக்கடி போட்டாேக்கள் மற்றும் சில ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை கஸ்தூரி கடற்கரையில் வாக்கிங் செல்லும் போது பயன்படுத்தும் உடையை அணிந்து இருக்கும் போட்டோவை போட்டு. இது பல வருடங்களுக்கு முன்பு எடுத்தது.. எத்தனை வருடம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? நான் எவ்வளவு மாறிவிட்டேன்? உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள் என்றும், இந்த போட்டோ எடுக்கப்பட்ட வருடத்தை நான் நாளை பதிவேற்றுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

actress kasturi photos

இணையவாசிகள் சும்மா போட்டோ போட்டாலே கமெண்டில் கருத்துக்களை சொல்லுவார்கள், இதில் கஸ்தூரியே கமெண்டில் சொல்லுங்க என்று சொல்லிவிட்டதால் கமெண்ட் பாக்ஸ் நிரம்பி வழிகிறது. அதில் ஒருவர், படையப்பா வசனம் தான் நினைவிற்கு வருகிறது, உங்களுக்கு இன்னும் வயதே ஆகல என்றும், வயது ஆக ஆக அழகும் இளமையும் ஒன்றாக இருக்கும் அழகு தேவதை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X