என்னது கிழவியா.. போய் வேலை இருந்தா பாருங்கடா? நடிகை கஸ்தூரி- அஜித் ரசிகர்கள் மீண்டும் மோதல்!

By

சென்னை: நடிகை கஸ்தூரி, அஜித் ரசிகர்கள் மீண்டும் ட்விட்டரில் மோதலை தொடர்வது பரபரப்பாகி இருக்கிறது.

Recommended Video

KASTHURI CHAT | உலகத்துலயே அதிகமா DEPRESSION ல சாகுறது யார் தெரியுமா ? | V-CONNECT | FILMIBEAT TAMIL

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி. பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்துகள் தெரிவித்து வருகிறார்.

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் இவர் தெரிவித்த கருத்துகளை அடுத்து இருவருக்கும் ட்விட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது.

சிரிப்பாக வருகிறது

சிரிப்பாக வருகிறது

இருவரும் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கஸ்தூரியை முட்டாள், காமெடி பீஸ் என தரக்குறைவாக விளாசிய நடிகை வனிதா, அவரை பிளாக் செய்து விட்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். பின்னர் கஸ்தூரி, உங்களை கேள்வி கேட்டால், அவர்களை அவதூறாகப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். சிங்கப் பெண்ணே, சிரிப்பாக வருகிறது' என்று கூறியிருந்தார்.

பார்த்து வளர்ந்த வனிதா

பார்த்து வளர்ந்த வனிதா

பின்னர் ஒரு நெட்டிசன், நீங்களும் வனிதாவும் இதற்கு முன் நட்பாக இருந்தவர்கள்தானே என்று கேட்டிருந்தார். அதற்கு கஸ்தூரி, 'நட்பு இல்லை. நான் பார்த்து வளர்ந்த பெண் வனிதா. இப்போதும் அவர் மீது எனக்கு எந்த பகையோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. பொதுவெளியில் வனிதா கொச்சையாக பேசி, பலரையும் காயப்படுத்தி வருகிறார். அந்த போக்கை மாற்றி கொண்டால் உதவ தயாராக உள்ளேன்' என்று கூறி இருந்தார்.

அஜித் ரசிகர்கள் மோதல்

அஜித் ரசிகர்கள் மோதல்

இந்நிலையில் ட்விட்டரில் அடுத்த பிரச்னை தலை தூக்கி இருக்கிறது. கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் மீண்டும் மோதல் தொடங்கி இருக்கிறது. நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஆபாசமாக பதிவிட்டிருந்தவற்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார் கஸ்தூரி. அதில் 'அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா' என்று கூறியிருந்தார்.

5 வயது குறைந்தவள்

5 வயது குறைந்தவள்

இப்போது, கஸ்தூரி பிரபுவுடன் நடித்த ஒரு பாடல் வீடியோவை போஸ்ட் செய்துள்ள ஒரு அஜித் ரசிகர், கஸ்தூரிக்கு டேக் செய்து, அவரை கிண்டலடித்துள்ளார். இதனால் கொதித்துப் போன கஸ்தூரி, 'எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? Ajith sir கேட்டாரா, அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதுல காமெடி என்னன்னா, கஸ்தூரி ‘கிழவி'யாம்.. அஜித்தை விட ஐந்து வயது குறைந்தவள், ஐயோ ஐயோ' என்று பதிவு செய்துள்ளார்.

அறிவு இல்லையா?

அறிவு இல்லையா?

மற்றொரு ட்வீட்டில், 'போயி வேற வேலை இருந்தா பாருங்கடா. உங்களை மாதிரி #dirtyAjithFans னால All Respectful Ajith Fans க்கும் சேர்த்து கெட்ட பேரு. அதை புரியுற அளவுக்காவது அறிவு இருக்கா இல்லையா? என்று காட்டமாக கேட்டுள்ளார். கஸ்தூரியின் இந்தப் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் ஜென்டில்மேன்

அஜித் ஜென்டில்மேன்

மற்றொரு பதிவில், 'இதுபோன்ற மோசமானப் பதிவுகளை போஸ்ட் செய்து அஜித் குமார் பெயரைக் கெடுக்க வேண்டாம். அஜித் ஒரு ஜென்டில்மேன். அவரை அதிகம் மதிக்கிறேன். அவரது ரசிகர்கள் என்று சொல்வதில் பெருமை அடையும் ரசிகர்கள் அவரை பெருமை படுத்துங்கள். இதுபோன்ற மலிவான செயல்களில் ஈடுபட வேண்டாம்'என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X