TASMAC : மாமா உங்களுக்கு சிகப்பா ஆரஞ்சா பச்சையா.. மீம் போட்டு வெளுத்து வாங்கும் பிரபல நடிகை!

சென்னை: தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் திறந்ததை மீம் போட்டு வெளுத்து வாங்கியுள்ளார் நடிகை கஸ்தூரி.

Recommended Video

தாலிய அறுக்க வெச்சிடீங்க | Director Amir Emotional Speech

தொடர்ந்து சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

பலர் அவரது கருத்துக்களை ஆமோதித்தும், சிலர் அவரையே டிரோல் செய்தும் வருகின்றனர்.

மீண்டும் திறப்பு

மீண்டும் திறப்பு

உயர்நீதிமன்ற வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடையை பெற்று மீண்டும் தமிழக அரசு TASMAC கடைகளில் திறந்து, வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. வெள்ளிக் கிழமையானால் புதுப்படம் ரிலீஸ் ஆவது போல, நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளின் வார வசூல் விரைவில் பாக்ஸ் ஆஃபிஸில் இடம்பெறும் என தெரிகிறது.

கிண்டல் செய்து மீம்ஸ்

கிண்டல் செய்து மீம்ஸ்

பெரிய பிரச்சனைகளையும், மீம் அளவிலேயே கிண்டல் செய்து கண்டனம் தெரிவிக்கும் பழக்கம் மக்கள் மனதிலேயே அதிகரித்து விட்ட நிலையில், டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு எதிராக பல நகைச்சுவை மீம்கள், மதுப்பிரியர்களை போற்றியும், குடிகாரர்களை தாக்கியும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

விமர்சனம்

விமர்சனம்

தொடர்ந்து அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்து நடிகை கஸ்தூரி விவாத நிகழ்ச்சிகளிலும் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். இந்தியன், தமிழ்ப்படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை கஸ்தூரி தற்போது முழு நேர அரசியல் விமர்சகராக தன்னை காட்டிக் கொண்டு வருகிறார்.

சிகப்பா.. ஆரஞ்சா

சிகப்பா.. ஆரஞ்சா

இந்நிலையில், நடிகை கஸ்தூரி தற்போது ஒரு மீமை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில், "மாமா உங்களுக்கு சிகப்பா ஆரஞ்சா பச்சையா.. என சூரி கேட்க எது மாப்ள.. கொரோனா பாதிப்பு மண்டலமா என ரவிமரியா சொல்ல.. கொரோனா பாதிப்பா.. நான் டாஸ்மாக் டோக்கன் கலர கேட்டேன் மாமா.. எனும் மீமை போட்டு அரசை விளாசித் தள்ளி இருக்கிறார்.

கலர் கலரா

பிரபுதேவாவின் மிஸ்டர் ரோமியோ படத்தில் ஷில்பா ஷெட்டியுடன் அவர் ஆடும் பாடல் ஒன்றில், நடிகை ஷில்பா ஷெட்டி அணிந்திருக்கும் ஒரே டிரெஸ் பல வண்ணங்களில் மாறும். அந்த வீடியோவை ஷேர் செய்து கலர் கலரா டோக்கன் தருவதை கிண்டல் செய்து கஸ்தூரியின் ரசிகர் படை கமெண்ட் செய்து வருகின்றனர்.

கலர் ஜெராக்ஸ்

கலர் ஜெராக்ஸ்

டாஸ்மாக் டோக்கன்களை வித விதமாக டூப்ளிகேட்டாக கலர் ஜெராக்ஸ் எடுத்தும் சிலர் கைதாகி உள்ளனர். அந்த கதையை பராசக்தி படத்தின் வசனத்தை வைத்து தரமான சம்பவத்தை செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ என்றும், குடிகாரர்களுக்கு காவலாக போலீஸ்காரர்கள் வேலை செய்வதையும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X