ஓ இதுதான் பிளாஷ்'பேக்'கா? ஜன்னல்வச்ச ஜாக்கெட்டில் முன்னாள் ஹீரோயின்..செமயாக கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: தனது பிளாஷ்பேக் புகைப்படங்களை பதிவிட்டுள்ள முன்னாள் ஹீரோயினை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிரபல நடிகை கஸ்தூரி, 'ஆத்தா உன் கோவிலிலே' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

அடுத்து பிரபுவுடன் சின்னவர், செந்தமிழ்ப்பாட்டு, சத்யராஜின் அமைதிப்படை, கமல்ஹாசனின் இந்தியன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்துள்ள கஸ்தூரி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இவர் கடைசியாக, தமிழ்ப் படம் 2, வரலட்சுமி சரத்குமார் நடித்த வெல்வட் நகரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.

அதிரடி கருத்து

அதிரடி கருத்து

கடந்த சில வருடங்களாக, சமூக வலைத்தளங்களில் அதிரடி கருத்துக்களைத் தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பிகினி புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். 'அந்த வருடத்தில் இதே நாள்' என்று 2016 ஆம் ஆண்டு அவர் கோஸ்டோரிகா கடலில் குளிக்கும் போட்டோவையும் பீச்சில் பிகினியில் நிற்கும் போட்டோவையும் வெளியிட்டிருந்தார்.

பிளாஷ் 'பேக்'

பிளாஷ் 'பேக்'

இதற்கு ரசிகர்கள் கண்டபடி தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிளாஷ் 'பேக்' (Flash'back') என்று கேப்ஷன் கொடுத்துள்ள கஸ்தூரி, தமிழ்ப்படம் 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிவித்துள்ளார். இதற்கும் ரசிகர்கள் கண்டபடி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜன்னல்கள் எண்ணிக்கை

ஜன்னல்கள் எண்ணிக்கை

நடிகை சாக்‌ஷி அகர்வால், இதற்கு செக்ஸி என்று கமென்ட் போட்டுள்ளார். ஒரு ரசிகர், சென்னையில் வெயில் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க ஜன்னல்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இந்த மாதிரிலாம் போட்டோ போட்டா நாங்க என்ன பண்றது? என்று ஒருவர் கேட்டுள்ளார். இன்னொருவர் வயசானாலும் தலைவி டக்கர் டோய் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்பெஷல் ட்ரீட்

ஸ்பெஷல் ட்ரீட்

இன்னொருவர், முன்ன எல்லாம் சண்டேவுக்கு ஸ்பெஷல் ட்ரீட் வைப்பீங்க.. இப்பவும் எதிர்பார்க்கலாமா? என்று கேட்டிருக்கிறார். ஒரு நெட்டிசன், நீங்க இந்தியன் படத்து கஸ்தூரியா? மிஸ் சென்னை கஸ்தூரியா? என்று கேட்டுள்ளார். இந்த வயசுலயும் இப்படி அழகா இருக்கீங்களே..சீக்ரெட் சொல்ல முடியுமா? என்று சில கேட்டுள்ளனர்.

Recommended Video

Kasthuri praises biggboss Sakshi Agarwal
வயசான காலத்துல

வயசான காலத்துல

ஒரு ரசிகர், வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் அப்படியே இருக்கு என்று ரஜினியிடம் ரம்யா கிருஷ்ணன் பேசும் படையப்பா வசனத்தைக் குறிப்பிட்டுள்ளார். வயசான காலத்துல ஏங்க இப்படி? என்று சிலர் கலாய்த்துள்ளார். இன்னும் சிலர், அவர் அழகை கவிதையாக வர்ணித்துள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X