நைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்
மும்பை: பிரபல பாலிவுட் இயக்குனர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகையும், மாடலுமான கேட் சர்மா தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் மீ டூ இயக்கம் தீவிரமடைந்துள்ளது. இயக்குனர் சுபாஷ் கை தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். அதை சுபாஷ் கை மறுத்தார்.
இந்நிலையில் நடிகையும், மாடலுமான கேட் சர்மா சுபாஷ் கை மீது புகார் கூறியுள்ளார்.

கேட் சர்மா
சுபாஷ் கை மீது போலீசில் புகார் அளித்துள்ளார் கேட் சர்மா. அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சுபாஷ் கை என்னை ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி தனது வீட்டிற்கு வருமாறு கூறினார். அவர் வீட்டுற்கு சென்றபோது அங்கு 5, 6 பேர் இருந்தார்கள். அனைவர் முன்பும் தனக்கு மசாஜ் செய்துவிடுமாறு சுபாஷ் என்னிடம் கூறினார் என்றார் கேட்.

மசாஜ்
சீனியர் இயக்குனர் என்பதால் அவர் பேச்சை மறுக்க முடியவில்லை. அவர் கேட்டுக் கொண்டபடி அவருக்கு மசாஜ் செய்துவிட்டேன். 2, 3 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு கையை கழுவ பாத்ரூமுக்கு சென்றேன். அவர் என் பின்னே பாத்ரூமுக்கு வந்தார். உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று கூறி அவரின் அறைக்கு அழைத்துச் சென்றார் என்று கேட் தெரிவித்தார்.

முத்தம்
அறைக்குள் சென்ற பிறகு அவர் என்னை கட்டப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். நான் கிளம்ப வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அவரோ இரவு என்னுடன் இருக்காவிட்டால் படத்தில் அறிமுகம் செய்து வைக்க மாட்டேன் என்று மிரட்டினார் என்று கேட் கூறினார். இந்நிலையில் தன் பெயரை கெடுக்க சிலர் இப்படி பேசுவதாக கூறுகிறார் சுபாஷ்.

ஆதரவு
மீ டூ இயக்கத்தை ஆதரிக்கிறேன். ஆனால் சிலர் குறுகிய காலத்தில் பிரபலமாக நினைத்து இந்த இயக்கத்தை தவறாக பயன்படுத்தி அதன் பலனை கெடுக்காமல் இருக்க வேண்டும். என் பெயரை கெடுக்க முயற்சி செய்வோர் குறித்து என் வழக்கறிஞர் பார்த்துக் கொள்வார். நான் எந்த பெண்ணையும் பலாத்காரம் செய்யவில்லை என்கிறார் சுபாஷ் கை.


Click it and Unblock the Notifications











