பெரியம்மை, போலியோவை வென்றுவிட்டோம்.. கொரோனாவையும் வெல்வோம்.. நடிகை கஸ்தூரி !

சென்னை : பெரியம்மை ,போலியோ, காலரா போன்றவற்றை எதிர்த்து போராடி வென்றிருக்கிறோம் இதை போல கொரோனாவையும் வென்று காட்டுவோம் என்று நடிகர் கஸ்தூரி கூறியுள்ளார்.

Recommended Video

கொரோனாவை ஒரு கை பார்ப்போம் | ACTRESS KASTHURI | FILMIBEAT TAMIL

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் . தற்போது கொரோனா தொற்று வேகமாக உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில் மக்கள் எதை செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை வீடியோ பதிவாக பகிர்ந்து இருக்கிறார்.

 Actress kathuri awareness video about covid19

இதில் கஸ்தூரி கொரோனா தொற்று காரணமாக வீட்டிலே இருக்க வேண்டிய சூழல் நமக்கெல்லாம் இருக்கிறது. இப்போது அனைவரின் வீட்டிலும் இணையம் இருக்கிறது இதனால் அவரவர்கள் தங்களின் வீட்டிலே இருந்தபடி இணையத்தில் உடற்பயிற்சிகளை கற்று வீட்டில் இருந்தபடியே உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் இந்த காலத்தில் சரியான உடற்பயிற்சி இல்லாமல் தான் நமது உடம்பிற்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் போகிறது. அந்த காலத்தில் உணவு செய்யும் முறையிலேயே உடற்பயிற்சி இருந்தது அதுதான் நம்மை சரியான உடற்கூரோடு வைத்து இருந்தது.

அந்த காலத்தில் ஊர் மற்றும் கிராமங்களில் திருவிழாக்கள் வரும்போது ஊர் முழுதும் மஞ்சள் தெளித்து வேப்பிலை கட்டி வைப்பார்கள். அதனுடன் காப்பு என்று ஒன்று கட்டுவார்கள் அப்படி காப்பு கட்டி விட்டால் யாரும் கிராமத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் யாரும் உள்ளேயும் வர மாட்டார்கள். அது போல சாமிக்கு காப்பு கட்டியதாக நினைத்து ஊரடங்கை மதித்து வீட்டில் இருங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் கஸ்தூரி .

 Actress kathuri awareness video about covid19

முன்னெச்சரிக்கையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் சிறிது காய்ச்சல் இருந்தாலும் கூட நாம் சோதித்து விட வேண்டும். கொரோனா தொற்று மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இருந்தும் இந்த நேரத்தில் நாம் சுத்தமாக இருப்பது நம்மை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் என்று கூறியுள்ளார். மேலும் மஞ்சள் தண்ணீர் அல்லது கிருமிநாசினி எது வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார் .

இறுதியாக நாம் அனைவரும் பெரியம்மை ,போலியோ, காலாரா மற்றும் ஸ்பேனிஸ் காய்ச்சல் போன்றவற்றை எதிர்த்து போராடி வென்றிருக்கிறோம் நமக்கு இது சர்வ சாதாரணமான விஷயம். இதை நாம் கட்டாயம் வென்று காட்டுவோம். நம் நாட்டில் பெரியம்மை மற்றும் போலியோ என்பது அறவே கிடையாது அதை போல இதையும் துடைத்தெறிவோம் என்று ஊக்கமளித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X