கனவுக்கன்னி கத்ரீனா கைஃப்-க்கு இன்று பிறந்தநாள்... இணையத்தை திக்குமுக்காட வாழ்த்து !
மும்பை : தனது தொடர் வெற்றிப் படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் ஓரிரு நடிகைகளில் கத்ரீனா கைஃப் மிக முக்கியமானவர்.
Recommended Video
ஆங்கிலப்படங்களில் தோன்றும் கதாநாயகிகளை போல பாலிவுட் திரைத்துறையிலும் தனக்கென ஒரு தனித்துவமான பிம்பத்தை உருவாக்கி நடிப்பு மற்றும் கவர்ச்சி என அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார்.
அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வரும் இவர் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்.

சக்ஸஸ்புல் குயினாக
ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையான அழகாலும், நடிப்பாலும் மற்றும் தோற்றத்தாலும் நம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் நடிகை கத்ரீனா கைஃப். இவர் நடித்துள்ள பல படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்த நிலையில் பாலிவுட்டில் இவர் பல ஆண்டுகளாக சக்ஸஸ்புல் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மிகப்பெரிய அடையாளம்
அக்சய்குமார், சல்மான்கான், ரித்திக் ரோஷன், அமீர்கான் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள கத்ரீனா முதன்முதலில் "பூம்" என்ற திரைப்படத்தின் மூலம் தனது பாலிவுட் அறிமுகத்தை கொடுத்தார். பிளாக் காமெடியில் திரில்லர் படமாக வெளிவந்த பூம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

தெலுங்கிலும் அறிமுகம்
பாலிவுட்டில் ஏற்கனவே பல நடிகைகள் பல வருடங்களாக முன்னணியில் இருந்து வரும் நிலையில் தனக்கான ஒரு இடத்தை பெறுவது கத்ரீனா கைஃப்க்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனினும் தனது முதல் படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை கொண்டு தெலுங்கிலும் தனது அறிமுகத்தை கொடுத்திருந்தார்.

சூப்பர் டூப்பர் ஹிட்டாகி
இவ்வாறு தனது முதல் படம் பூம் பாலிவுட்டில் வெற்றியடைந்ததை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து மல்லீஸ்வரி என்ற திரைப்படத்தில் நடித்து அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூலை வாரி குவித்த நிலையில் இந்த படம் மலையாள மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அங்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

மிகப்பெரிய சம்பளம்
தென்னிந்திய மொழி படங்கள் பாலிவுட்டில் மிக குறைவாகவே டப் செய்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், மல்லீஸ்வரி திரைப்படம் "சந்த் சா ரோஷன்" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஹிந்தியிலும் வெளியிடப்பட்டது. கத்ரீனா கைஃப் மல்லீஸ்வரி திரைப்படத்தில் நடிப்பதற்காக 70 லட்சம் ரூபாய் சம்பளம் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தொகை அப்போது இருந்த தென்னிந்திய நடிகைகளிலேயே யாரும் வாங்காத மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி நாயகியாக
இவ்வாறு பாலிவுட் திரைப்படங்களில் அறிமுகமாகி பின் டோலிவுட்டில் தனது முதல் படத்தை கொடுத்து அங்கேயும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இவ்வாறு ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்த கத்ரீனா கைஃப் இன்று வரை வெற்றி நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

ரெக்கார்ட் பிரேக்கை
இவரின் நடிப்பில் வெளியான சர்கார், ஏக் தா டைகர், தூம் 3, அக்னிபாத் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டி பல ஆண்டுகளாக இருந்தார் ரெக்கார்ட் பிரேக்கை முறியடித்து வசூல் சாதனை புரிந்து வந்துள்ளது.

அசராத அழகுதேவதை
இவ்வாறு தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் சிறப்பான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தாமல், கவர்ச்சியிலும் வந்து ரசிகர்களுக்கு பந்தி போட்டு பரிமாறி வரும் அசராத அழகுதேவதை கத்ரீனா கைஃப் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இணையத்தை திணறடித்து
ஜூலை 16 ஆம் தேதியான இன்று இவர் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரின் மேல் அளவுகடந்த அன்பு வைத்துள்ள வெறித்தனமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது எக்கச்சக்கமான பிறந்தநாள் வாழ்த்துக்களை கொட்டி இணையத்தை நேற்று முதலே திணறடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











