இயக்குனர் ஆன இன்னொரு முன்னாள் ஹீரோயின்... தனித்துவமான காதல் கதையை த்ரில்லர் படமா எடுக்கிறாராம்!

By

சென்னை: டைரக்டர்கள் ஆன நடிகைகள் வரிசையில் இன்னொரு முன்னாள் ஹீரோயினும் இப்போது இணைந்துள்ளார்.

Recommended Video

Man vs Wild Rajinikanth | Bear Grylls | Valimai | Boomi Teaser

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் காவேரி. அங்கு பல படங்களில் நடித்தார்.

பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி நடித்த கண்ணுக்குள் நிலவு படம் மூலம் இவர் தமிழுக்கு வந்தார். நடிகர் விஜய்யின் 25 வது படம் இது.

கருப்பன்

கருப்பன்

தமிழில் தொடர்ந்து, பிரஷாந்த் நடித்த அப்பு, பிரபுதேவாவின் பெண்ணின் மனதைத் தொட்டு, பார்த்திபனின், நினைக்காத நாளில்லை, சரத்குமார், முரளி நடித்த சமுத்திரம், கண்ணாடி பூக்கள், ராமநாராயணன் தயாரித்த குட்டிப் பிசாசு, சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளியான கருப்பன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

தியாகம் தொடரில்

தியாகம் தொடரில்

தெலுங்கில் கல்யாணி என்ற பெயரில் பல படங்களில் நடித்துள்ள இவர், இயக்குனர் சூரியகிரணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஐதராபாத்தில் செட்டில் ஆனார். தொடர்ந்து நடித்து வந்த காவேரி, தொடர்களிலும் நடித்தார். சன் டிவியில் வெளியான தியாகம் உட்பட சில தொடரில் நடித்திருந்தார். மலையாளத் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இயக்குனர் ஆகிறார்

இயக்குனர் ஆகிறார்

இவர் இப்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். தமிழில் ஏற்கனவே, பல நடிகைகள் படங்களை இயக்கி உள்ளனர். அவர்கள் வரிசையில் இவரும் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இன்று காலை வெளியிட்டார். இதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

சுகாசினி

சுகாசினி

இந்தப் படத்தில் சேத்தன் சீனு ஹீரோவாக நடிக்கிறார். இவர் தமிழில், நான் சிவப்பு மனிதன் படத்திலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சுகாசினி மணிரத்னம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கே2கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகை காவேரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 'இது தமிழ்-தெலுங்கில் உருவாகும் படம். சில உண்மை நிகழ்வுகளைக் கொண்ட தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் படமாக உருவாக்கி உள்ளோம்' என்றார் காவேரி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X