கொரோனாவின் கோரப்பசிக்கு மகனை பறிகொடுத்த பிரபல நடிகை.. கணவர் கவலைக்கிடம்.. சோகத்தில் தமிழ் சினிமா!
சென்னை: பிரபல நடிகையான கவிதா கொரோனா பெருந்தொற்றுக்கு தனது அன்பு மகனை பறிகொடுத்துள்ளார்.
ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை முதல் அம்மா வரை
நடிகை கவிதா தனது 11 வயதில் சினிமாவுக்கு அறிமுகமானார். குழந்தை நட்சத்திரம், ஹீரோயின், கவுரத் தோற்றம், அம்மா கேரக்டர் என எல்லா ரோல்களிலும் நடித்துள்ளார்.

1976ல் அறிமுகம்
தமிழில் 1976 ஆம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் சினிமா இன்டஸ்ட்ரிக்குள் கால் பதித்தார் கவிதா. அதே ஆண்டு தெலுங்கிலும் ஸ்ரீஸ்ரீ முவ்வா என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் ஏராளமான படங்கள்
தெலுங்கில் மட்டும் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவிதா. தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, அல்லி தர்பார், நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், நட்சத்திர நாயகன், செந்தமிழ் பாட்டு என பல படங்களில் நடித்துள்ளார்.

சீரியல்களில் கவிதா
தற்போது 55 வயதான நடிகை கவிதா, சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறர். சன் டிவியில் ஒளிபரப்பான கங்கா, நந்தினி ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார் கவிதா.

என்றென்றும் புன்னகை
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களிலும் நடித்து வருகிறார் கவிதா.

மகன் மரணம்
பாஜகவில் உள்ள கவிதா அரசியலிலும் தீவிரமாக உள்ளார். இந்நிலையில் நடிகை கவிதாவை பெரும் சோகம் ஆட்டிப் படைத்துள்ளது. கவிதாவின் மகன் சாய் ரூப் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று
கடந்த ஆண்டு கொரோனா தொடங்கியதுமே படப்பிடிப்புக்கெல்லாம் நோ சொல்லி விட்டு வீட்டிலேயே இருந்தார் நடிகை கவிதா. கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் கோரத் தாண்டவம் ஆடியது.

மகன் கொரோனாவுக்கு பலி
இதில் கவிதாவின் மகன் சாய் ரூப், கவிதாவின் கணவர் தசரத ராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி கவிதாவின் மகன் சாய் ரூப் மரணமடைந்தார்.

பிரபலங்கள் ஆறுதல்
அவரது கணவர் தசரத ராஜ் தீவிர சிகிச்சையில் உள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு மகனை பறிக்கொடுத்த நடிகை கவிதாவுக்கு தெலுங்கு, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











