ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம்.. திரையுலகத்தை அதிரவிட்ட செய்தி.. பிரபல நடிகை பேட்டி!

சென்னை: மூத்த நடிகையான கவிதா, ரஜினியும் நானும் ரகசிய கல்யாணம் செய்து கொண்டதாக பரவிய செய்தி குறித்து பேட்டி அளித்துள்ளார்.

ஓ மஞ்சு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கவிதா. ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

actress kavitha shared interesting information about rajinikanth and her marriage gossip

நடிகர் விஜய்யின் முதல் படமான நாளை தீர்ப்பு மற்றும் அஜித் நடித்த முதல் படமான அமராவதி உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை கவிதா.

நடிகை கவிதா பேட்டி: மூத்த நடிகையான நடிகை கவிதா அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அதில், ஓ மஞ்சு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது நடிக்க போகமாட்டேன் என்று தரையில் உருண்டு புரண்டு அழுதேன். சரி படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஸ்கூலுக்கு போகலாம் என்று நினைத்தேன். அதன் பிறகு அடுத்தடுத்த படத்தில் நடித்ததால் என் படிப்பு அப்படியே நின்று விட்டது.

ரகசிய திருமணம்: ரஜினியுடன் பல படத்தில் சேர்ந்து நடித்ததால், ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம் நடந்து விட்டது என்று ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியானது. அப்போது நான் மோகன் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். மேக்கப் மேன் தான் அந்த பத்திரிக்கையை எங்களிடம் காட்டினார். அப்போது நான் வளர்ந்து வரும் நடிகையாக இருந்ததால், மோகன் பாபு மிகவும் வருத்தப்பட்டார்.

பொய் செய்தி: அப்போது நாங்கள் அனைவரும் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கே நேராக சென்று, பொய்யான செய்தியை ஏன் போடுறீங்க என்று சண்டை போட்டோம் அப்போது அந்த பத்திரிக்கை தவறை ஏற்றுக்கொண்டு மறுப்பு போடுவதாக சொன்னார்கள். அதற்குள் இந்த செய்தி காட்டுத்தீ போல எங்கள் வீடு வரை சென்று, வீட்டில் இருந்து போன் வந்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றார்.

actress kavitha shared interesting information about rajinikanth and her marriage gossip

கதறி அழுத நடிகை: தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரவிய நேரத்தில் எங்கள் வீட்டில் பாட்டி, மகன் உட்பட ஏழு பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம். அனைவருமே தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்படித்தான் என்னுடைய கணவரும் மருந்து மாத்திரைகளை எடுத்தார். ஆனால் சிகிச்சை பலன் கொடுக்கவில்லை. கூடவே என்னுடைய மகனும் உயிரிழந்து விட்டான். இந்த உலகத்தில் எது இல்லை என்றாலும் நான் இருந்து விடுவேன். ஆனால் அவர் இல்லாமல் என்னால் வாழவே முடியவில்லை என்று நடிகை கவிதா கதறி அழுதார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X