பிரபல நடிகையிடம் மேடையிலேயே அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்னு சொன்ன மாதவன்.. அட இது எப்போ நடந்தது?
சென்னை: தென்னிந்திய சினிமா உலகமே தற்போது மிகவும் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் விஷயங்களில் ஒன்று சைமா விருதுகள் முக்கிய இடம் வகிக்கின்றது எனலாம். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சைமா விருதுகள் விழா மேடையில் நடிகர் மாதவன், மலையாள நடிகை காவ்யா மதாவனிடம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் எனக் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகின்றது.
இந்த விழாவில் மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. பிரபல மலையாள இயக்குநர் கமாலுதீன் முகமது மஜீத் இயக்கத்தில் வெளியான கடாமா படத்தில் நடித்ததற்காக காவ்யா மாதாவனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நடிகர் மாதவன் வழங்கினார். விருதினைப் பெற்ற நடிகை காவ்யா மாதவன் இந்த விருதினைப் பெறுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் தனது ஆரம்பகால சினிமாவில் தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக நடிகர் மாதவனிடம் இது தொடர்பாக நீண்ட நாட்களாக பேசவேண்டும் என இருந்ததாகக் கூறி, பேசினார். முதலில் மலையாளத்தில் பேசுவதாக சொன்ன காவ்யா மாதவன், அதன் பின்னர் மலையாளம் கொஞ்சும் தமிழில் பேசினார்.
ஆச்சரியம்: அப்போது அவர் பேசுகையில், " நான் சினிமாவில் அறிமுகமான காலகட்டம் அது. அப்போது நீங்கள் (மாதவன்) டாப் நடிகராக இருந்தீர்கள். நாங்கள் படபிடிப்புக்காக ஊட்டிக்கு வந்திருந்தோம். அங்கு இருந்த மக்கள், சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் என அனைவரும் என்னை வந்து பார்த்துச் சென்றனர். எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆச்சரியமாக இருந்தது.

மாதவனின் மனைவி: அதன் பின்னர்தான் எனக்கு உண்மை தெரியவந்தது. என்னுடன் இருக்கும் நடிகர் ஜெயசூர்யா, அவர்தான் அந்த படத்தின் கதாநாயகனும். அவர் ஊட்டியில் உள்ள மக்களிடம் நான் தான் நடிகர் மாதவனின் மனைவி எனக் கூறியுள்ளார். அப்போதுதான் எனக்கு எல்லாம் தெரியவந்தது. இதனை நாங்கள் பலமுறை உங்களிடம் சொல்லவேண்டும் என நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இப்போதுதான் சொல்ல முடிந்தது என நடிகை காவ்யா மாதவன் சொல்லி முடித்தார்.
அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்: காவ்யா மாதவன் சொல்வதை சிரித்தபடி கேட்டுக் கொண்டு இருந்த நடிகர் மாதவன், உடனே நோ ப்ராப்ளம் எனக் கூறினார். இதனால் அரங்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும், நடிகர் மாதவன், நான் நடித்த முதல் படத்தில் ஒரு டயலாக் பேசினேன். அது என்னவென்றால், " அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்" என்பதுதான் எனக் கூறினார். இதைக் கேட்டதும் நடிகை காவ்யா மாதவன் தலையில் கை வைத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டார். அதன் பின்னர் நடிகர் மாதவன் நடிகை காவ்யா மாதவனுக்கு நன்றி கூறிவிட்டு மேடையில் இருந்து கீழ் இறங்கிச் சென்றார்.

இந்த வீடியோவை சைமாவே தனது யூட்டூப் பக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகின்றது. இதற்கு ரசிகர்கள் பலர் என்னதான் இருந்தாலும் நடிகர் மாதவன் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











