காவ்யா மாதவனுக்கு இன்று பிறந்த நாள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

கொச்சி : மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் பெரும் ரசிகர் கூட்டத்தையும் அதேசமயம் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருப்பவர் நடிகை காவ்யா மாதவன்.

குழந்தை நட்சத்திரமாக தனது ஏழாவது வயதிலேயே நடிப்பை தொடங்கிய காவ்யா மாதவன் அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.

இவ்வாறு மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் காவ்யா மாதவன் இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகை சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் ரசிகர்கள் இவரது பிறந்தநாளை சமூகவலைதளங்களில் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

மலையாள சினிமாவில் தனக்கான மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டு வெற்றி நாயகியாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காவ்யா மாதவன் கலைத்துறைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

சிறு வயதிலேயே நடிக்க வந்த காவ்யா மாதவன் 1999 ஆம் ஆண்டு வெளியான "சந்திரநொடிக்குண்ண திகில் " என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக முதன்முறையாக அறியப்பட்டார்.

வெற்றிகளை குவித்துள்ளனர்

வெற்றிகளை குவித்துள்ளனர்

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே நடிகர் திலீப்புடன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற நிலையில் இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து பல வெற்றிகளை குவித்துள்ளனர்.

ரியல் ஜோடி

ரியல் ஜோடி

கிட்டத்தட்ட 18 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் திலீப் மற்றும் காவ்யா மாதவன் இணைந்து நடித்துள்ள நிலையில் இந்த ரீல் ஜோடி இப்பொழுது நிஜ வாழ்விலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்கள் கூட்டம் பெருகின

ரசிகர்கள் கூட்டம் பெருகின

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் காவ்யா மாதவன் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான "காசி" திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளியான "காசி "திரைப்படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்திற்கு கூட்டிச்செல்ல காவ்யா மாதவனுக்கு தமிழ் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அறிமுகம் கிடைத்த நிலையில் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகின.

ஆர்வம் காட்டவில்லை

ஆர்வம் காட்டவில்லை

காசி திரைப்படத்தை தொடர்ந்து "என் மன வானில் "மற்றும் "சாது மிரண்டா" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமாக உள்ள இவர் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருவதால் தமிழில் நடிக்க அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் நடித்து பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள காவ்யா மாதவன் இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X