Kayadu Lohar: நெகடிவ் பப்ளிசிட்டி.. உஷாரான கயாடு லோஹர்.. அதிரடியாக சம்பளத்தை ஏத்திட்டாங்களேப்பா!

சென்னை: நடிகை கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகை. தமிழில் நடித்த முதல் படமே ஹிட். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியான டிராகன் படத்தில் இவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருந்ததால் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இப்படி இருக்கும்போது நடிகை கயாடு லோஹர் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம்.

நடிகை கயாடு லோஹர் ஏற்கனவே கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து அசத்தியிருந்தார். தமிழில் இவர் நடித்த படமான டிராகன் படத்தில் இவருக்கு எந்த அளவுக்கு வரவேற்பும் புகழும் கிடைத்ததோ அதே அளவுக்கு மற்றொரு விஷயத்தில் அவருக்கு நெகடிவ் பப்ளிசிட்டியும் கிடைத்தது.

Actress Kayadu Lohar Increase Her Salary Nearby 1 5 Crores After Negative Publicity
Photo Credit:

அதாவது சில மாதங்களுக்கு முன்னர் மொத்த திரை உலகை மட்டும் இல்லாமல், ரசிகர்களையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் ஒன்று நடந்தது. அந்த சம்பவத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரது பெயர் பயங்கரமாக அடிபட்டது. தயாரிப்பாளர் பெயருடன் கயாடுவின் பெயரும் அடிபட்டது. இது அவருக்கும் அவரது ரசிகர்களுக்குமே பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் கயாடு லோஹர் இது குறித்து எதுவும் கருத்து சொல்லவில்லை. மேலும் அவர் குறித்து பரவிய வதந்திகள் அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

அதிரடி வளர்ச்சி: இந்நிலையில் கயாடு லோஹர் அதர்வா படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், சிம்புவின் 49 வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இது மட்டும் இல்லாமல், தனுஷின் அடுத்த படத்திலும் அவர் கமிட் ஆகி உள்ளார் எனக் கூறப்படுகிறது. தற்போது கயாடு லோஹர் குறித்த தகவல் ஒன்று திரைத்துறையில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, கயாடு லோஹர் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். கயாடு முதலில் லட்சங்களிலும் அதிக கால்சீட் கேட்கும் படங்களில் கிட்டத்தட்ட ஒரு கோடியும் சம்பளமாக வாங்கி வந்துள்ளார். டிராகன் படத்தில் கயாடு லோஹர் லட்சங்களில்தான் சம்பளம் பெற்றார் எனக் கூறப்படுகிறது.

Actress Kayadu Lohar Increase Her Salary Nearby 1 5 Crores After Negative Publicity
Photo Credit:

சம்பள உயர்வு: ஆனால் இப்போது கயாடு லோஹர் ஒரு படத்திற்கு ரூபாய் 1.5 கோடிகள் வரை சம்பளம் கேட்கிறராம். இவர் இப்படி சம்பளத்தை உயர்த்த காரணமே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதைப் போல தான் எனவும் கூறுகிறார்கள். இது மட்டும் இல்லாமல், ஏற்கனவே தனக்கு நெகடிவ் பப்ளிசிட்டி ஏற்பட்டுள்ளதால் கயாடு லோஹர் இந்த பப்ளிசிட்டி மூலம் தனக்கு கிடைத்த விளம்பரத்தை வைத்து சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டு உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X