Kayadu Lohar: கயாடு லோஹரின் எடை என்னனு தெரியுமா? 50 KG தாஜ்மஹால் எல்லாம் இல்லைங்க.. அதுக்கும் கீழ..
சென்னை: நடிகை கயாடு லோஹர் தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நட்சத்திரம். தமிழில் அவர் அறிமுகமான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, அவருக்கு புகழை ஈட்டித் தந்தது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பல படங்களில் ஒப்பந்தமாகி தனது திறமையை நிரூபித்தவர். தற்போது அதர்வாவுடன் 'இதயம் முரளி', ஜி.வி. பிரகாஷுடன் 'இம்மார்ட்டல்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், சிம்பு மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களிலும் அவர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிம்பு படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் கயாடு லோஹர் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதற்கு முன் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து, ரசிகர்களிடையே பிரபலமானவர். தமிழில் அவர் முதலில் ஒப்பந்தமான படம் 'இதயம் முரளி'. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தாலும், அதற்குப் பிறகு ஒப்பந்தமான 'டிராகன்' படம் கடந்த பிப்ரவரி 21 அன்று வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. இதில் கயாடு லோஹரின் குடும்பப் பாங்கான தோற்றமும், கவர்ச்சியான நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்தது.

தமிழ் பேச முயற்சி: அசாமைச் சேர்ந்த கயாடு லோஹர், தற்போது தமிழ் மொழியைக் கற்று வருகிறார். நிகழ்ச்சிகளில் அவர் பேசும் அழகிய தமிழ், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாட்டியின் கண்ணாடியை வாங்கி போட்டுக் கொண்டேன் என தமிழிலேயே கேப்ஷனிட்டு புகைபடத்தை பகிர்ந்திருந்தார். ரசிகர்களைக் கவர படாதபாடு பட்டு வரும் கயாடு லோஹர்,பற்றி சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய தகவல் இணையத்தில் பரவியது.
வதந்தி: தமிழ்நாடு டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் கயாடு லோஹருக்கு தொடர்பு இருப்பதாக சிலர் வதந்தி பரப்பினர். இருப்பினும், இது தொடர்பாக அமலாக்கத்துறை எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவலையும் வெளியிடவில்லை.மேலும், கயாடு லோஹர் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி ரசிகர்களிடையே வேகமாக பரவி, படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்திய சினிமாவில் விலைமாது கதாபாத்திரங்கள் எப்போதும் தனி கவனத்தை பெறுவது வழக்கம். இதனால், கயாடு இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்த செய்தி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடை: இந்நிலையில் கயாடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தான் சமீபத்தில் தனது நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவற்றில் தனது எடை தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் கயாடு லோஹரின் எடை 34.5 கிலோ என உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்களும் இணையவாசிகளும், கயாடு நீங்க உண்மையிலேயே 34.5 கிலோ தானா? இல்ல, சரியா வேலை செய்யாத எடை மிஷினில் எடை பார்த்தீர்களா எனக் கேட்டு வருகிறார்கள். தற்போது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











