சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ் யோகாசனம்.. மேரேஜ்க்கு பிறகும் உடம்பு ரப்பர் மாதிரி வளையுதேப்பா!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தனது காதலன் அந்தோனியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் மிகவும் செலக்டிவாகவே படங்களில் கமிட் ஆகி வருகிறார். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ரிவால்வர் ரீட்டா படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தான் யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்ற நடிகை. கமர்ஷியல் படமோ யதார்த்தத்திற்கு நெருக்கமான படமோ எதில் தான் கமிட் ஆனாலும் அதற்கு நியாயம் சேர்க்கும் நடிப்பை வெளிப்படுத்தும் வெகு சில நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். மலையாளத்தைத் தாய் மொழியாக கொண்டவராக இருந்தாலும், மொத்த தென்னிந்திய சினிமாவும் அவரை அரவணைத்துக் கொண்டது.

சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் வந்திருந்தாலும் இவர் சினிமா உலகில் பல விமர்சனங்களுக்கும் கேலி கிண்டல்களுக்கும் ஆளானார். குறிப்பாக இவரை முன்னணி நடிகர்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கவெல்லாம் செய்தார்கள். அப்படி இருக்கும்போது, தன் மீதான பல விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் முன்னேறிய நடிகை கீர்த்தி சுரேஷ். தனது திரை வாழ்க்கையில் வெற்றிகளை இப்போது வரை குவித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் சீக்ரெட்: உடல் பருமனாக உள்ளார் என்ற விமர்சனத்தை எல்லாம் அடித்து துவைக்கும் விதமாக உடல் எடையைக் குறைத்துக் காட்டியவர் அதன் பின்னர் அதை இப்போதுவரை மெயிண்டைன் செய்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் உடல் எடையைக் குறைத்தது மட்டுமல்லாமல் அதனை எவ்வாறு மெயிண்டைன் செய்கிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. ரசிகர்களின் இந்த கேள்விக்கு தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பதில் அளித்துள்ளார்.

யோகாசன புகைப்படங்கள்: கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் யோகாசனம் செய்து கொண்டு இருக்கும் படியான 11 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 11 புகைப்படங்களிலும் 11 வகையான யோகாசனத்தில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதனைப் பார்த்த ரசிகர்கள், யோகாசனத்தில் சூர்யாவை மிஞ்சி விடுவார் போலயே என கமெண்ட் அடித்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் யோகாசன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை தட்டி வருகிறார்கள். சில யோகாசனங்களுக்கு ரசிகர்கள் ஃபையர் விட்டு வருகிறார்கள்.
பகாஷனா ஆசனம்: அதாவது கீர்த்தி சுரேஷ் தனது இரண்டு கைகளிலும் பலத்தைக் கொடுத்து தனது உடலை மேலெழுப்பி வைத்திருக்கும் பகாஷனா போஸ்க்கு ரசிகர்கள் ஃபையர் விட்டு வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆதவன் படத்தில் சூர்யா யோகாசன போஸ்களை நடித்துக் காட்டியிருப்பார். கீர்த்தி சுரேஷின் யோகாசன போஸ்கள் சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இருக்கேப்பா என ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











