ஒரு கையில் நெற்கதிர்… ஒரு கையில் கதிரருவாள்… விவசாயியாக மாறிய கீர்த்தி பாண்டி!
சென்னை : தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.
பிரபல நடிகர் அருண் பாண்டியன்னுடைய மகள் தான் கீர்த்தி பாண்டியன்.
அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை பெற்றார்.

ரீ எண்டரி
ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்பாண்டியன். இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளர் , விநியோகஸ்தர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் அன்பிற்கினியாள் படத்தில் ரீ எண்டரி கொடுத்தார்.

அட்வென்சர் மூவி
அருண்பாண்டியனுக்கு 3 மகள்கள். அவரது 2வது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் ஹரீஷ் ராம் இயக்கத்தில் உருவான தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். காமெடி கலந்த ஒரு அட்வென்சர் படம் என்பதால் குழந்தைகள் இப்படத்தை விருப்பி ரசித்தனர்.

பிரபலமானார்
அன்பிற்கினியாள் படத்தின் மூலம் அனைவரும் உற்று நோக்கும் நடிகையாக மாறிய கீர்த்திபாண்டியன். தனது அப்பா அருண்பாண்யனுடன் இணைந்து நடித்தார். அப்பாவும் மகளும் இணைந்து நடித்தது தான் அன்பிற்கினியாள் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்தது. மலையாளத்தில் ஹிட்டடித்த ஹெலன் படத்தின் ரீ மேக் தான் அன்பிற்கினியாள்.

கையில் நெற்கதிர்
ஊரடங்கால் திருநெல்வேலியில் இருக்கும் கீர்த்தி பாண்டியன் விவசாயி போல நெற்கதிர்களை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். மேலும், விவசாயத்தை கற்றுக்கொண்டேன் என்றும் , அதிக மழை பெய்ததற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











