இதுதான் நடந்துச்சு… அப்பா நலமாக இருக்கிறார்… கீர்த்திபாண்டியன் ட்வீட் !

சென்னை : அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தனது தந்தை அருண்பாண்டியன் கொரோனாவை எப்படி வென்றார் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

அப்பா பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சாங்க Keerthi Pandian Shocking | Arun Pandian

இந்தப்பதிவு கொரோனா பயத்தால் இருக்கும் நோயாளிகளுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது அப்பா நலமாக இருப்பதாகவும் கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பல கட்டுப்பாடுகள்

பல கட்டுப்பாடுகள்

கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்த பலக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. நேற்றிலிருந்து முழு ஊரடங்கு வரும் 24ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பதம் பார்க்கும் கொரோனா

பதம் பார்க்கும் கொரோனா

கொரோனா இந்திய திரைப்பிரபலங்களை பதம் பார்த்து வருகிறது. கேவி ஆனந்த், தாமிரா, பாண்டு, கல்தூண் திலக் ,ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது தமிழகத் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெஞ்சுவலி

நெஞ்சுவலி

இந்நிலையில்,நடிகை கீர்த்திபாண்டியன், தனது தந்தை அருண்பாண்டின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டது குறித்து பதிவிட்டுள்ளார்.அதில் , எனது தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 7 நாட்களுக்கு பிறகு அவருக்கு திடீரெனநெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், மருத்துவர்கள் பிரச்சினை ஏதும் இல்லை பயப்படவேண்டாம் என்று கூறியுள்ளனர்.

ஆஞ்சியோ ப்ளாஸ்ட்

ஆஞ்சியோ ப்ளாஸ்ட்

ஆனால், அப்பா இல்லை எனக்கு உடலில் ஏதோ பிரச்சினை இருக்கு என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். இதையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு இதயக்குழாய்களில் இரண்டு இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதாலும், அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்பதாலும் கூடுதல் கவனத்தோடு ஆஞ்சியோ ப்ளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.

நலமாக இருக்கிறார்

நலமாக இருக்கிறார்

தற்போது, அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டார் என்று கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளார். அப்பா சரியான நேரத்தில் தன் உடல் தந்த சமிக்ஞைகளை மருத்துவர்களிடம் உரிய நேரத்தில் கூறியதால் தான் இப்போது அவர் நலமாக இருக்கிறார். ஆனால், சில வயதானவர்கள் அப்படி கூறுவது இல்லை என்று கூறினார். கொரோனாவின் அச்சமூட்டுத் தகவல்கள் பரவி வரும் நேரத்தில் இந்த மாதிரி பாசிட்டிவ் கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைக்கவே இதை பதிவிடுவதாக கீர்த்தி பாண்டியன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X