திருமண கோலத்தில் இறங்கி குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.. பிறந்தநாள் சர்ப்ரைஸ் இதோ!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தெலுங்கிலும் நானியுடன் இணைந்து தசரா என்ற படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்றைய தினம் கீர்த்தியின் பிறந்தநாளையொட்டி அவரது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழிலும் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களில் இவர் நடித்து வருகிறார்.

சாணிக் காயிதம் படம்
அந்த வகையில் சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் என்ற படத்தில் பொன்னி என்ற கேரக்டரில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார். படத்தில் இயக்குநர் செல்வராகவனின் தங்கையாக கீர்த்தி நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு நடிக்க அதிகமான ஸ்கோப் காணப்பட்டது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

கவர்ச்சிப் பாணிக்கு மாறிய கீர்த்தி
இந்தப் படத்துடன் இணைந்து மகேஷ்பாபுவுடன் கீர்த்தி நடித்திருந்த சர்க்காரு வாரிப்பட்டா படம் வெளியானது. இந்த இரண்டு படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருந்தார் கீர்த்தி. சர்க்காரு வாரி பட்டாவின் எப்போதும் போலில்லாமல் கவர்ச்சி தூக்கலாக இவரது கேரக்டர் அமைந்திருந்தது.

கீர்த்தியின் தயாரிப்பாளர் அவதாரம்
இதனிடையே தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார் கீர்த்தி, மலையாளத்தில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து வாஷி என்ற படத்தில் நடித்து தயாரிக்கவும் செய்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்ற போதிலும் கீர்த்திக்கு இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் கீர்த்தி
இதனிடையே தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் என்ற படத்தில் நடித்துள்ளார். வடிவேலுவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா என்ற படத்தில் வித்தியாசமான கேரக்டரில் கீர்த்தி நடித்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்தப் படத்தின் நாயகன் நானியின் பர்ஸ்ட் லுக் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் கீர்த்தியின் பிறந்தநாளையொட்டி அவரது பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் மணப்பெண் கோலத்தில் கீர்த்தி குத்தாட்டம் போடுவதாக அமைந்துள்ளது.

தசரா பட போஸ்டர்
இதனிடையே இந்த போஸ்டரை நானி வெளியிட்டுள்ளார். படத்தில் வெண்ணிலாவாக கீர்த்தி நடித்துள்ள நிலையில், வெண்ணிலா என்பது பெயர் மட்டுமல்ல அது ஒரு எமோஷன் என்று கூறியுள்ள நானி, கீர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் கிராமத்து பெண்ணாக கீர்த்தி நடித்துள்ளார்.

பான் இந்தியா படம்
இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











