தம் தம் பாடலுக்கு நாய்க்குட்டியுடன் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வேற லெவல் வீடியோ
சென்னை : நடிகர் விஷால், ஆர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் எனிமி.
தீபாவளியையொட்டி வெளியான இந்தப் படத்தின் தம் தம் பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் பாடலுக்கு தன்னுடைய நாய்க்குட்டியுடன் ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

எனிமி படம்
நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் தீபாவளியையொட்டி வெளியான படம் எனிமி. விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவருக்கும சமமான கேரக்டர்கள் இருந்தது. இருவருமே மிரட்டியிருந்தனர்.

சிறப்பான வரவேற்பு
அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடித்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நண்பர்களாக இருக்கும் இருவர் எதிரிகளாக, நண்பனே எனிமியாக மாறினால் என்னவாகும் என்பதை இந்தப் படம் கதைக்களமாக கொண்டிருந்தது.

தம் தம் பாடல்
தீபாவளியையொட்டி இந்தப் படம் அண்ணாத்த படத்துடன் வெளியானது. அண்ணாத்த படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான ஆதரவை அளித்த நிலையில், எனிமி படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. முன்னதாக இந்தப் படத்தின் தம் தம் பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

சிறப்பான பாடல்
இந்தப் பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. பாடலில் விஷால் மற்றும் மிருணாளினி ரவி உள்ளிட்டோர் போட்டிருந்த ஆட்டமும் சிறப்பாக இருந்தது. இருவருக்குள் இருந்த கெமிஸ்ட்ரியும் பேசப்பட்டது. குறிப்பாக மிருணாளினி ரவியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

கீர்த்தி சுரேஷ் ஆட்டம்
இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
நாய்க்குட்டியுடன் ஆட்டம்
தனது விருப்பத்திற்குரிய நாய்க்குட்டியை மடியில் வைத்துக் கொண்டு கைகால்களை மட்டும் ஆட்டி உட்கார்ந்த நிலையில் அவர் ஆட்டம் போட்டுள்ளார். மிகவும் க்யூட்டாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது. அவருக்கே உரிய அழகான சிரிப்புடன் இந்த ஆட்டத்தை அவர் ஆடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











