சரக்கடித்தாரா கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய அளவில் பிசியான நடிகையாக உள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
அவரது நடிப்பில் தமிழில் தற்போது மாமன்னன் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அடுத்தடுத்து ரகு தாத்தா, சைரன் போன்ற படங்களிலும் நடித்துவருகிறார் கீர்த்தி.
தெலுங்கில் நானியுடன் கீர்த்தி நடித்துள்ள தசரா படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய படத்தின் பிரமோஷன்களில் தற்போது கீர்த்தி பிசியாக பங்கேற்று வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். துவக்கத்தில் மிகவும் ஹோம்லியாக நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கிளாமர் ரூட்டிற்கு தாவியுள்ளார். அவரது சமூக வலைதளப்பக்கங்களில் அவர் பதிவிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்ஸ்களையும் அள்ளி வருகின்றன. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி நடித்துள்ளார்.

தசரா படத்தின் பிரமோஷன்
இந்நிலையில் அடுத்ததாக நானியுடன் ஜோடி சேர்ந்து கீர்த்தி நடித்துள்ள தசரா படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து படத்தின் பிரமோஷன் பணிகளில் கீர்த்தி சுரேஷ் தற்போது முழு மூச்சில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பாடல் வெளியீடு மும்பையில் நடைபெற்றது. இதில் கலக்கலான ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் கூடிய புடவையில் கீர்த்தி சுரேஷ் கலந்துக் கொண்டார்.

பாடல் வெளியீட்டு விழா
இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சரக்கு பாட்டிலை கொண்டுவந்த கீர்த்தி சுரேஷ், அதை கல்ப்பாக அடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இதையடுத்து அந்த பாட்டிலில் இருந்தது சரக்கு இல்லை என்றும் குளிர்பானம் என்றும் தெரிந்தது. இந்த நிகழ்வின்போது நடிகர்கள் நானி மற்றும் ராணா உள்ளிட்டவர்களும் உடல் இருந்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கலக்கல் புடவையில் கீர்த்தி
இதனிடையே இந்த காஸ்ட்யூமில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள போட்டோஷுட்டின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள படத்தில் வெண்ணிலா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் கீர்த்தி. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளது.

தமிழிலும் அடுத்தடுத்த படங்கள்
தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். உதயநிதியின் கடைசி படமாக மாறியுள்ள இந்தப்படத்தின் நாயகி என்ற பெருமை தற்போது கீர்த்திக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் ரகுதாத்தா, சைரன் போன்ற படங்களிலும் கீர்த்தி நாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











