Keerthi Suresh: கீர்த்தி சுரேஷை கடிக்க வந்த அட்லீ வீட்டு நாய்க்குட்டி.. அலறி ஓடிய நடிகை!
சென்னை: சமீபத்தில் இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் லீட் கேரக்டரில் நடித்துள்ள ஜவான் படம் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது.
ஜவான் படத்தை இயக்குநர் அட்லீ, பிரியா அட்லீ உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கொண்டாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என அடுத்தடுத்து இவர்கள் அனைவரும் கொண்டாடியுள்ளனர்.

நடிகை கீர்த்தி சுரேஷை கடிக்க வந்த அட்லீ வீட்டு நாய்க்குட்டி: நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் அட்லீ, அவரது மனைவி அட்லீ உள்ளிட்டவர்கள் நெருங்கிய நட்புடன் பழகி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது இணைந்து பல வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். பல கொண்டாட்டங்களை இவர்கள் இணைந்து கொண்டாடி வருகின்றனர். இவர்கள் இந்தக் கொண்டாட்டங்களின்போது வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜவான் படத்தின் வெற்றியை இவர்கள் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்தின்போது ஜவான் படத்தின் ஹையோடா பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா அட்லீ இருவரும் இணைந்து ஆட்டம் போட்டுள்ளனர். எளிமையான உடையில் இருவரும் காணப்படும் இந்த நடன வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறறுள்ளது. கீர்த்தி சுரேஷிற்கு இணையாக பிரியாவும் இந்த வீடியோவில் சிறப்பாக நடனமாடுவதை பார்க்க முடிகிறது. கீர்த்தி சுரேஷ், படங்களிலும் சிறப்பாக நடனமாடுபவர் என்பதால், இந்த வீடியோவில் அவரும் சிறப்பாகவே காணப்படுகிறார்.
இந்நிலையில், இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்ற வகையில் இயக்குநர் அட்லீ, தன்னுடைய வீட்டின் நாய்க்குட்டியுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறார். நடனமாடிக் கொண்டிருக்கும் கீர்த்தி என்ன நினைத்தாரோ, தன்னுடைய நடனத்தை நிறுத்திவிட்டு, நாய்க்குட்டியை கொஞ்ச களமிறங்குகிறார். ஆனால், நாய்க்குட்டிக்கு இது பிடிக்கவில்லை போலும். அவரை கடிக்க அது பாய்கிறது. உடனடியாக அதனிடமிருந்து தெறித்து ஓடுகிறார் கீர்த்தி.

நடனத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோவில் அலப்பறையை காட்டியுள்ளது நாய்க்குட்டி. அதன் கன்ட்ரோல் அட்லீயிடம் இருந்தததால் கீர்த்தி சுரேஷ் தப்பித்தார். இதனிடையே, இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், Just for Fun என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உற்சாக மிகுதியால் தான் இதுபோன்று சில நேரங்களில் நடந்துக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டதற்கு ஏற்றாற்போல, நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென நாயை கொஞ்ச போய் அதனிடம் மொக்கை வாங்கியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அட்லீ தம்பதி மிகவும் நெருக்கமான நண்பர்களாக நீண்ட காலங்களாக காணப்படுகின்றனர். இவர்களின் நட்பு அவ்வப்போது பல பதிவுகளாக இன்ஸ்டாகிராமில் வெளிப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜவான் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக அட்லீக்கு வாழ்த்துக்களை கூறி கீர்த்தி பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவில் மச்சி என்று அவர் அட்லீயை குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் தாங்கள் இணைந்திருந்த புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











