Keerthi suresh: தோசை என்று அழைக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்.. தென்னிந்திய நடிகைக்கு கிடைத்த பட்டப்பெயர்!

மும்பை: நடிகர் விஜய், சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டரில் நடித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான தெறி படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி உள்ளிட்டவர்கள் நடிப்பில் பேபி ஜான் படம் ரிலீசாகியுள்ளது.

பேபி ஜான் படம் கலையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து கிறிஸ்துமஸ் விடுமுறையில் படம் அதிகமான ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணமான சூழலிலும் இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றதை பார்க்க முடிந்தது.

keerthi suresh baby john movie mumbai

பேபி ஜான் படம்: கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள பேபி ஜான் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த சில ஆண்டுகளாக அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாலிவுட்டில் பேபி ஜான் படம் ரிலீசாகியுள்ளது. இந்த படம் தமிழில் விஜய், சமந்தா உள்ளிட்டவர்கள் நடித்து வெளியான தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்: இந்த படத்தில் சமந்தா கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். காலீஸ் இயக்கத்தில் இந்த படத்தை இயக்குநர் அட்லி பாலிவுட்டில் தயாரித்துள்ளார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் தன்னுடைய அறிமுகத்தை செய்துள்ளார். இந்நிலையில் தெறி படம் அளவிற்கு இந்த படம் அதிகமான வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பதிலாக விஜய்யின் தெறி படத்தையே டப்பிங் செய்து ரிலீஸ் செய்திருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்ததை பார்க்க முடிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் -ஆண்டனி தாட்டில் திருமணம்: தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை பெற்றோர் சம்பந்தத்துடன் கீர்த்தி கோவாவில் திருமணம் செய்துள்ளார். திருமணம் நிறைவடைந்து சில தினங்களிலேயே அவர் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன்களுக்காக வருண் தவான், வாமிகா கபி ஆகியோருடன் இணைந்திருந்தார். அப்படி ஒரு பிரமோசனின் போது ஸ்டைலிஷ் லுக்கில் செய்தியாளர்களை கீர்த்தி சுரேஷ் சந்தித்தார். அப்போது அவரது பெயரை கிரீத்தி என்று பலரும் உச்சரித்தனர். இதையடுத்து பொறுமையாக அவர்களுக்கு கிரீத்தி இல்லை கீர்த்தி என்று தன்னுடைய பெயரை வெளிப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ்.

தோசை என்று அழைக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்: இதனிடையே அவரை தங்கள் பக்கம் திருப்பும்வகையில் தோசை என்றும் சிலர் அழைத்தனர். இதற்கும் சற்றும் கடுப்பாகாத கீர்த்தி சுரேஷ், தான் தோசை இல்லை என்றும் கீர்த்தி சுரேஷ் என்றும் கூறினார். ஆனால் தனக்கு தோசை மிகவும் பிடிக்கும் என்றும் கீர்த்தி சுரேஷ் அவர்களிடையே பேசிவிட்டு அங்கிருந்து சென்றதை பார்க்க முடிந்தது. அவரது இந்த அமைதியான அணுகுமுறை அனைவரையும் வாயடைக்க வைத்தது. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டிற்கு செல்லும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் பலவிதமான நெருக்கடிகளை சந்திப்பதாக கூறப்படும்நிலையில், கீர்த்தி சுரேஷை தோசை என்று அழைத்தது தென்னிந்திய ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X