அடுத்தடுத்து திரைப்பிரபலங்களை தாக்கும் கொரோனா... கீர்த்தி சுரேஷுக்கும் கொரோனாவாம்
திருவனந்தபுரம் : கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது தீவிரமடைந்துள்ளது.
நடிகர், நடிகைகள் பலரும் கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
த்ரிஷா, மீனா, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா 3வது அலை
கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்பித்தது என்னவோ சாதாரணமாகத்தான். ஆனால் அது தொடர்ந்து தற்போது தீவிரமடைந்துள்ளது. பலரும் தொடர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திரைப் பிரபலங்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

திரைப்பிரபலங்கள் பாதிப்பு
தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். சத்யராஜ், மீனா, த்ரிஷா, பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் சத்யராஜ் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகவும் அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் விரைவில் தனது அன்றாட பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவரது மகன் சிபி சத்யராஜ் இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷிற்கு கொரோனா பாதிப்பு
இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பிரபலங்கள் வரிசையில் இணைந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் பிசியாக நடித்துவந்த இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பை மீறி கொரோனா தாக்குதல்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கீர்த்தி. சிறிய அளவிலான அறிகுறிகளே காணப்பட்டதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்புடன் இருந்தாலும் இந்த வைரஸ் பரவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் டெஸ்ட் எடுக்க அறிவுறுத்தல்
கோவிட் குறித்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தான் தன்னை தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பாதுகாப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த நாட்களில் தன்னுடன் நெருங்கி பழகியவர்கள் கோவிட் டெஸ்ட் எடுத்துக் கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video

ஊசிப் போட்டுக் கொள்ளுங்கள்
ஊசிப் போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்மூலம் கோவிட் பரவாமல் தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் விரைவில் குணமடைவேன் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











