Keerthi Suresh: வடிவேலுவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்.. என்ன இப்படி இறங்கிட்டாங்க!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
உதயநிதியுடன் அவர் இணைந்து நடித்துள்ள மாமன்னன் படம் அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதையொட்டி பேட்டிகளையும் அவர் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது பேட்டிகளில் மாமன்னன் படம் குறித்தும் மேலும் பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்.

நடிகர் வடிவேலுவை இமிடேட் செய்த கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி ஷெட்டி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் சிறப்பான படங்களை மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் இவரை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழில் இவரது நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் படம் ரிலீசாகவுள்ளது. உதயநிதி, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்
உதயநிதி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்தப் படம் அவருக்கு சினிமாவில் கடைசிப்படம் என்று கூறப்பட்டுள்ளது. அவரது கடைசிப் படத்தில் அவருக்கு நாயகியாக நடித்த பெருமையை தற்போது கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு, வழக்கமான தன்னுடைய காமெடியை விட்டு களமிறங்கி கேரக்டர் ரோலில் கலக்கியுள்ளார். உதயநிதி மற்றும் வடிவேலுவின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகி அதிரடியாக அமைந்துள்ளது.
இந்தப் படம் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தற்போது தொடர்ந்து ப்ரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷும் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். இதில் படம் குறித்து மட்டுமில்லாமல் பல விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். மகாநதி படம் கீர்த்திக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்ததாக தான் கமர்ஷியல் படங்களில் நடிக்க விரும்பியதாகவும் ஆனால் தொடர்ந்து தனக்கு நாயகியை மையப்படுத்தியே பட வாய்ப்புகள் கிடைத்ததாகவும் அவர் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிது காலங்கள் கழித்தே தனக்கு கமர்ஷியல் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே மாமன்னன் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த உதயநிதி மற்றும் வடிவேலு குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் வடிவேலுவை இமிடேட் செய்யும் வகையில், அவரது ஆவ்வ்வ் என்ற செய்கையும் கீர்த்தி சுரேஷ் செய்து காட்டினார். தொடர்ந்து தனக்கு வடிவேலுவின் அட போப்பா என்ற காமெடி டயலாக்தான் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் தெலுங்கில் நானியுடன் கீர்த்தி இணைந்து நடித்த தசரா படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், அடுத்ததாக சிரஞ்சீவியுடன் இணைந்து போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழின் வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது தமிழிலும் மாமன்னன் படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் கீர்த்தி இணைந்துள்ளார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











