Keerthi suresh: ரொம்ப நாள் ஆயிடுச்சு. தனுஷின் NEEK படத்திற்கு சர்ட்டிஃபிகேட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

சென்னை: நடிகர் தனுஷின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. கடந்த ஆண்டில் ராயன் படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது NEEK படம் ரிலீசாகியுள்ளது. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படமும் உருவாகி வருகிறது.

முன்னதாக ப. பாண்டி மற்றும் ராயன் படங்களை இயக்கியுள்ள நிலையில் இன்றைய தினம் நீக் படம் தனுஷின் இயக்கத்தில் 3வது படமாக வெளியாகியுள்ளது. முற்றிலும் இளைஞர்களை மையமாக வைத்து தற்காலத்திய காதலை சொல்லும் படமாக வெளியாகி உள்ளது நீக். இந்தப் படத்தை தொடர்ந்து இட்லி கடை படத்தின் சூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Dhanush NEEK movie Keerthis suresh

நடிகர் தனுஷ்: ப பாண்டி படம் மூலம் தமிழில் இயக்குநராக என்ட்ரி கொடுத்த நடிகர் தனுஷ், அடுத்ததாக நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டில் ராயன் படத்தை இயக்கியிருந்தார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷின் இரண்டாவது படமாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் தனுஷின் இயக்கம் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இன்றைய தினம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீசாகியுள்ளது.

NEEK படம்: இந்த படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார் தனுஷ். முற்றிலும் இளைஞர்களை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார். படத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர்,வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். படம் ரசிகர்களை கவர்ந்து சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. கலகலப்பான ரொமாண்டிக் ஜானரில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ். படத்தில் மேலும் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், நரேன் உள்ளிட்டவர்களும் கவனம் ஈர்த்துள்ளனர்.

Dhanush NEEK movie Keerthis suresh

கீர்த்தி சுரேஷ் பாராட்டு: காதல் மற்றும் காதல் தோல்வியை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இந்நிலையில் இந்த படத்தை பார்த்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் படம் குறித்து தனது உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். படம் க்யூட்டாகவும் சிறப்பாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இது போன்ற க்யூட்டான கதைக்களத்தில் லவ் ஸ்டோரியை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தனுஷ் இயக்கியுள்ளது மேலும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தில் அனைவரும் மிகவும் நன்றாக நடித்துள்ளதாகவும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனுஷை போலவே பவிஷ்: தொடர்ந்து தனுஷை இங்கு பார்ப்பேன் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் பார்க்க முடியவில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தனுஷிற்கும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் பவிஷ், தன்னுடைய சிரிப்பு உள்ளிட்டவற்றால் தனுஷை நியாபகப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக தனுசுடன் இணைந்து தொடரி என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில், தனுஷின் படத்தை பார்த்து அவர் மெச்சியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X