For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ப்பா.. என்னா மனசு.. என் வாழ்க்கையில் உங்களைவிட சிறந்தது எதுவுமில்லை.. உருகிய கீர்த்தி சுரேஷ்!

  |

  சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பக்கம் பக்கமாய் உருகியிருக்கும் பதிவு பலராலும் லைக் செய்யப்பட்டு வருகிறது.

  Myna Nandhini Baby Bump • Yogeshwaran surprise B'day Bash

  நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

  முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், படங்களில் செம பிஸியாக உள்ளார்.

  அரண்மனை 3ம் பாகத்தில் ஆம்பள பேய்.. காஞ்சனா லாரன்ஸுக்கு டஃப் கொடுக்க சுந்தர்.சியின் மாஸ்டர் பிளான்! அரண்மனை 3ம் பாகத்தில் ஆம்பள பேய்.. காஞ்சனா லாரன்ஸுக்கு டஃப் கொடுக்க சுந்தர்.சியின் மாஸ்டர் பிளான்!

  குடும்பத்துடன் கொண்டாட்டம்

  குடும்பத்துடன் கொண்டாட்டம்

  அண்மையில் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். பாரம்பரிய சேலையில் தனது செல்ல பிராணிகளுடனும் குடும்பத்தினருடனும் எடுத்த அசத்தல் போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

  இவ்வளவு பெரிய குடும்பம்

  இவ்வளவு பெரிய குடும்பம்

  அதனை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் கீர்த்தி சுரேஷின் அழகை வர்ணித்ததோடு மறு பக்கம் அவரது குடும்பத்தை பார்த்தும் வாய் பிளந்தனர். அம்மா, அப்பா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன், தம்பி, தங்கை என 13 பேர் உள்ளதை பார்த்த ரசிகர் இவ்வளவு பெரிய குடும்பமா என ஆச்சரியப்பட்டனர்.

  நைக் பிறந்தநாள்

  நைக் பிறந்தநாள்

  கீர்த்தி சுரேஷின் ஓணம் செலிபிரேஷன் போட்டோக்கள் இன்னமும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஒரு பதிவு பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷின் செல்ல நாயான நைக்கின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த பதிவை ஷேர் செய்துள்ளார்.

  2 ஆண்டுகள் ஆகிவிட்டன..

  2 ஆண்டுகள் ஆகிவிட்டன..

  அதில் பக்கம் பக்கமாக நைக் குறித்தும் அது, தனது வாழ்க்கையில் எந்தளவுக்கு பின்னி பிணைந்துள்ளது என்பது குறித்தும் உருக்கமாக எழுதியிருக்கிறார். எல்லா செல்லப்பிராணிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு குறிப்பை அவர் எழுதியிருக்கிறார். அதாவது, "இந்தச் சிறுவன் எங்கள் குடும்பத்திற்குள் நுழைந்து 2 வருடங்கள் ஆகிவிட்டன...

  நினைவில் வைத்திருப்பேன்

  நினைவில் வைத்திருப்பேன்

  உன்னை விட்டு செல்ல முடியாமல் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நேரங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் இன்றையதைப் போலவே, ஒருவரின் வாழ்க்கையில் நீங்கள் உடனடியாக ஒரு விளையாட்டு மாற்றியாக மாறலாம். இதுதான் நீங்கள் செய்த வித்தியாசம்.

  யோசிக்க முடியாது

  யோசிக்க முடியாது

  நான் கீழே இருந்தபோதும், டல்லாக இருந்தபோதும், நீங்கள் நக்கும்போது நான் எப்படி உணர்ந்தேன் என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள். உங்களை விட என்னை நன்றாக உணரக்கூடிய எதையும் நான் யோசிக்க முடியாது! நீங்கள் ஒரு ஆச்சரியமாக வந்தீர்கள், நீங்கள் எங்களிடம் கொண்டு வரும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் மூட்டைகளுடன் எங்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறீர்கள்!

  மெல்லியவர்

  மெல்லியவர்

  நீங்கள் ஒரு கவர்ச்சியானவர், மெல்லியவர், மன்னிப்புக் கேட்கக்கூடியவராகவும், மிகத் தெளிவாக அதனை உங்களால் வெளிப்படுத்தவும் முடியும்! நான் வேலைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு எளிய பை சொல்வதை நான் மிகவும் கடினமாகக் கொண்டிருந்தேன், நீங்கள் வராதபோதும் கூட நீங்கள் காரில் குதித்தீர்கள்! நீங்கள் சந்திக்கும் எவரையும் பற்றி வயிற்றை தடவும் போது நீங்கள் தட்டையாகப் போவதைப் பார்ப்பது மகிழ்ச்சி!

  குவியும் லைக்ஸ்

  குவியும் லைக்ஸ்

  உங்கள் தாயிடமிருந்து ...
  உனக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் நைக் பேபி! என பதிவிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த நெகிழ்ச்சியான பதிவை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நைக்குடன் இருக்கும் போட்டோவையும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

  English summary
  Actress Keerthi Suresh pens emotional on her Pet Nike birth day. She says I cant think of anything that makes me feel better than just you.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X