வாவ்.. குட்டி ஸ்டோரி பாடலை வயலினில் வாசித்து விஜய்க்கு வேற லெவலில் வாழ்த்து கூறிய பிரபல ஹீரோயின்!
சென்னை: நடிகர் விஜய்க்கு பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான முறையில் அட்டகாசமாக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர் விஜய் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு, லாக்டவுன் நேரம் என்பதால் பெரும் விமர்சியாக ரசிகர்கள் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் தரப்பு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

பலரும் வாழ்த்து
இதனால் ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். விதவிதமான ஹேஷ்டேக்குகள், வீடியோ க்ளிப்பிங்ஸ் என ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். நடிகர் விஜய்க்கு முன்னணி நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

வயலினில் வாசித்து..
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்க்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறியுள்ளார். அதாவது, மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி பாடலை வயலினில் வாசித்து வாழ்த்து கூறியிருக்கிறார்.
ஆல்வேஸ் பி ஹேப்பி
அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கீர்த்தி சுரேஷ், லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, ஆல்வேஸ் பி ஹேப்பி.. பிறந்த நாள் வாழ்த்துகளை விஜய் சார் என்றும் உங்கள் பிறந்த நாளில் உங்களுக்கு ஒரு சிறு மரியாதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கும் எல்லாம் தெரியும்
அவரது இந்த வீடியோவை மாஸ்டர் டீம் மற்றும் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நகைச்சுவை நடிகரான சதீஷ், வீணையை கையில் வைத்தப்படி இருக்கும் போட்டோவை ஷேர் செய்து எனக்கும் எல்லாம் தெரியும் என கிண்டலாக கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இரண்டு படங்கள்
இதேபோல் நடிகை மஞ்சிமா மோகனும் லவ்டு இட் என பாராட்டியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷும் நடிகர் விஜயும் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு வெளியான பைரவா மற்றும் 2018 ஆம் ஆண்டு வெளியான சர்க்கார் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











