கீர்த்தி சுரேஷின் பிறந்த நாள் பார்ட்டியில் இத்தனை பிரபலங்களா? இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தனது பிறந்தநாளை திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

actress keerthy suresh 31st birthday party pics trending on social media

தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்ரி பயோபிக் படமான மகாநடி படத்தில் நடிக்க இயக்குநர் கீர்த்தி சுரேஷை தேர்வு செய்தார். அப்போது கீர்த்தி சுரேஷ் எங்க, நடிகையர் திலகம் சாவித்ரி எங்க என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அந்த விமர்சனத்திற்கு எல்லாம் தனது நடிப்பால் சரியான பதில் அடி கொடுத்தார். தன் நடிப்பின் மூலம் சாவித்ரியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கினார்.

அடுத்தடுத்த படங்களில் பிஸி: சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் புரட்சிப் பெண்ணாக நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டை பெற்ற இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் அழுத்தமான கதாபாத்திரம் பாராட்டை பெற்றது. தற்போது இவர், ரிவால்வர் ரீட்டா, ரகுதாத்தா என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

actress keerthy suresh 31st birthday party pics trending on social media

பிறந்த நாள் பார்ட்டி: இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையடுத்து, நேற்று இரவு கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் பார்ட்டி வைத்துள்ளார். அந்த பார்ட்டியில் நடிகைகள் பிரீத்தா, கல்யாணி பிரியதர்ஷன், பிரியா அட்லீ, நடிகர் கதிர், லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ், இயக்குனர் அட்லீ மற்றும் அவரது திரையுலக நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது எடுத்த அந்த குரூப் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

actress keerthy suresh 31st birthday party pics trending on social media

தெறி இந்தி ரீமேக்: தற்போது, நடிகை கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி இந்தியில் ரீமேக்கில், விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவண் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடிக்கின்றனர். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிற. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கீர்த்தி சுரேஷ் மும்பையில் முகாமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X