ஒரே ஒரு ஆட்டம் போட்டு லைக்குகளை அள்ளிய கீர்த்தி சுரேஷ்… என்னமா ஆடி இருக்காங்க !
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துசொல்லி டான்ஸ் ஆடிய வீடியோவை இதுவரை 70லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
Recommended Video
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த 22ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தில் வழியில் வாழ்த்துக்களை சொல்லி வந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆடி வாழ்த்து கூறினார்.

முன்னணி நடிகை
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர், ரஜினிகாந்துடன் அண்ணாத்தா திரைப்படத்திலும், செல்வராகனுடன் சாணிக்காயிதம் திரைப்படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

அறிமுகம்
இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்படத்திற்கு பிறகு, ரஜினி முருகன், தொடரி, ரெமோ,பைரவா, பாம்பு சண்டை, தானே சேர்ந்தகூட்டம்,பைரவா, சர்க்கார் என மளமளவென்று இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. மேலும் முன்னணி நடிகருடன் நடித்த நடிகை என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம்
நடிகையர் திலகம் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, பென்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த 3 திரைப்படங்களும் ஒடிடியில் வெளியாகின.

70 லட்சம் பார்வையாளர்கள்
இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக யூத் படத்தில் இடம் பெற்ற ஆல்தோட்ட பூபதி நானடா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாகி கிட்டத்தட்ட 70 லட்சம் பார்வையாளர்களை கடந்த சாதனை படைத்து வருகிறது. இந்த வீடியோகவை பார்த்த படத்துலக்கூட இப்படி ஆடுனது இல்லையே என்று ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











