Just In
- 8 min ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
- 27 min ago
சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ!
- 1 hr ago
ஆரி அர்ஜுனன் கூட படம் பண்ணுவீங்களா? ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்த பாலாஜி முருகதாஸ்!
- 2 hrs ago
வெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி!
Don't Miss!
- News
டெல்லியில் பெரும் பதற்றம்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்றுள்ள ஏராளமான தமிழக விவசாயிகள்
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Sports
ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறவே விரும்புகிறேன்... டிரா எல்லாம் 2வது ஆப்ஷன்தான்... பந்த் உறுதி
- Finance
அம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சீக்கிரமா போயிட்டியே சித்ரா.. நடிகை கீர்த்தி சுரேஷ் உருக்கம்.. ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!
சென்னை: பிரபல விஜே மற்றும் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த விஜே சித்ரா தனியார் ஹோட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது கோலிவுட்டை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சின்னத்திரை நடிகர்களை தாண்டி வெள்ளித்திரை நடிகர்களும் சித்ராவின் இந்த திடீர் மரணத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீக்கிரமா போயிட்டியே சித்ரா என தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
விஜே சித்ராவாக மக்கள் டிவி, வேந்தர் டிவி, விஜய் டிவி என ஏகப்பட்ட சேனல்களில் பணியாற்றிய சித்ரா, விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சித்ரா இறந்து விட்டார் என்பதை விட முல்லை போயிட்டாரே என்கிற கவலை தான் பலருக்கும் அதிகம்.

சந்தேகம் கிளப்பும் சக நடிகைகள்
விஜே சித்ரா நல்ல போல்டான, திறமையான பெண் என்றும் பணி நெருக்கடி காரணமாகவோ பர்சனல் விஷயம் காரணமாகவோ இப்படி தூக்கிட்டுக் கொள்ள மாட்டார். தற்கொலைக்கு எதிராக பேசி வந்தவர் எப்படி தற்கொலையை செய்துக் கொண்டார் என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருக்கக்கூடும் என சக நடிகைகளும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

விசாரணை வலையில் ஹேமந்த்
ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த ஹேமந்த் ரவி எனும் தொழிலதிபருடன் சித்ராவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. சம்பவம் நடந்த நேரத்திலும், அந்த தனியார் ஹோட்டலில் ஹேமந்த் உடன் தான் சித்ரா தங்கி இருந்தார். ஆனால், அவரை வெளியே போக சொல்லிவிட்டு குளிக்க செல்வதாக கூறிய சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், விசாரணை வலையில் ஹேமந்த் சிக்கி உள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்
சின்னத்திரை நடிகையான சித்ராவின் மரணம் ஒட்டுமொத்த சின்னத்திரை கலைஞர்களையும் திடுக்கிட செய்துள்ளது. நடிகை வனிதா விஜயகுமார், ஹேமா சதீஷ், ரேகா, சாந்தனு, ஆத்மிகா, சாக்ஷி அகர்வால் என சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சியுற்று இரங்கல் பதிவுகளை வெளியிட்டனர்.

சீக்கிரம் போயிட்டியே சித்ரா
இந்நிலையில், தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் சீக்கிரம் போயிட்டியே சித்ரா (Gone too soon. #RIPChitra) என பதிவிட்டு, சித்ராவின் அழகான போட்டோவையும் ஷேர் செய்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கண்ணீர் அஞ்சலி
நடிகை கீர்த்தி சுரேஷின் இரங்கல் பதிவை பார்த்ததும், கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜே சித்துவின் ரசிகர்கள் ஏகப்பட்ட இரங்கல் கமெண்ட்டுகளையும், கண்ணீர் அஞ்சலிகளையும் செலுத்தி வருகின்றனர். விஜே சித்துவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மற்றும் போலீஸ் விசாரணை என்ன சொல்ல போகிறது என்பதையும் எதிர்நோக்கி வருகின்றனர் ரசிகர்கள்.