தேவையில்லாமல் வெளியில் போகாதீங்க... தடுப்பூசி போடுங்க... கீர்த்தி சுரேஷின் விழிப்புணர்வு வீடியோ !
சென்னை : கொரோனா குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகை கீர்த்தி சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தடுப்பூசியின் அவசியம் குறித்தும், டபுள் மாஸ்க் குறித்தும் பேசி உள்ளார்.
சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி ஏற்கனவே கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும், ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமலும் மக்கள் அல்லல்ப்பட்டு வருகின்றனர்.

மக்களிடம் விழிப்புணர்வு
கொரோனா பாதிப்பு காரணமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கொரோனா குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காணொளி வெளியிட்டு வருகின்றனர்.

விழிப்புணர்வு வீடியோ
அண்மையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ஜெயம் ரவி கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

விழிப்புணர்வு வீடியோ
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்த, தேவை இல்லாமல் வெளியில் போகக்கூடாது, அப்படி போனாலும் மாஸ்க் போட்டுக்கிட்டு போங்க, டபுள் மாஸ்க் போடுங்கள், சமூக இடைவெளியை கடைபிடிங்க, தமிழக அரசு சொல்லும் விதிமுறையை கடைபிடிங்க. நான் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் நீங்களும் தடுப்பூசி கட்டாயம் போட்டுங்க, நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்போம், கொரோனாவை வெல்வோம் மக்களை காப்போம் என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











