கீர்த்தி சுரேஷ் பற்றி ஆபாச வீடியோ.... தந்தை போலீசில் புகார்!

கேரளா : நடிகை கீர்த்தி சுரேஷை குறித்து, தவறான முறையில் பேசி வீடியோவை வெளியிட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல முன்னணி நடிகை மேகனா மற்றும் சுரேஷ் குமாரின் மகள் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் விக்ரம்பிரபுவுடன் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

பலத்திரைப்படங்களில்

பலத்திரைப்படங்களில்

தமிழில் முதல் திரைப்படம் சிறப்பாக அமையவில்லை என்றாலும், ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பாம்புசட்டை, பைரவா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானர்.

மகாநதி

மகாநதி

நடிகையர் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியாக நடித்தார். இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்று சொல்லலாம் . இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்தற்காக தேசிய விருது வாங்கும் அளவுக்கு திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

தகாத வார்த்தை

தகாத வார்த்தை

இந்நிலையில், தற்போது அவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் மராக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை, அதை சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் பற்றி மிகவும் தகாத வார்த்தைகளில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மர்ம நபர்.

காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

அது மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லால் கவனத்திற்கு வந்திருக்கிறது. அவர் கீர்த்தி சுரேஷ் அப்பா தயாரிப்பாளர் சுரேஷ் குமாருக்கு இதுபற்றி தெரிவித்திருக்கிறார். அவர் உடனே திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகம் சென்று புகார் தெரிவித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷின் அப்பா தெரிவித்திருக்கும் இந்த புகார் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X