கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி‘ எப்போ ரிலீஸ் தெரியுமா… படக்குழு சொன்ன சூப்பர் அப்டேட் !

சென்னை : கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட்லக் சகி எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Recommended Video

தடுப்பூசி கண்டிப்பா போடுங்க | Actress Keerthy Suresh Awareness Video | Vaccine

இத்திரைப்படத்தில் நடிகர் ஆதி மற்றும் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைததுள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும், மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் ஆகிய படங்களை அடுத்தடுத்து வரிசையாக கைவசம் வைத்துள்ளார்.

3 மொழிகளில்

3 மொழிகளில்

நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குட்லச் சகி. இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கைனயாக நடித்துள்ளார். மேலும், இப்படம்தமிழ், தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

முக்கியமான ரோல்

முக்கியமான ரோல்

இப்படத்தில் விளையாட்டு, காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்து ஒரு களவையான திரைப்படமாக இது உருவாகி உள்ளது. ஜெகபதி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் திரைப்படம் வெளியாவது தாமதமாகி உள்ளது.

ஒடிடியில் ரிலீஸ் இல்லை

ஒடிடியில் ரிலீஸ் இல்லை

இந்நிலையில் ,குட்லக் சிகி திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளதாக இணையத்தில் வதந்திகள் பரவி வந்த நிலையில், குட்லக் சிகி ஒடிடியில் வெளியாகும் என்ற தகவல் உண்மையில்லை, விரைவில் அப்டேட்டை வெளியிடுவோம். அதுவரை அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று படக்குழு கூறியுள்ளது. வேகமாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X