கொலைவெறியில் கீர்த்தி சுரேஷ்…மிரட்டும் சாணி காயிதம் ட்ரெயிலர்

சென்னை : சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது ரசிகர்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது அந்தப் படம் தயாராகி, அதன் டிரைலர் வெளியாகி போஸ்டரில் இருந்த அதே தாக்கத்தை இந்த டிரைலரும் ஏற்படுத்தியுள்ளது.

சானி காயிதம் ட்ரெய்லரில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு, வசன உச்சரிப்புகள் மிரட்டலாக இருக்கிறது.

 ராக்கி இயக்குனர்

ராக்கி இயக்குனர்

சாணி காயிதம் படத்தின் இயக்குனர் அருள் மாதேஸ்வரன். இவர் இதற்கு முன்னர் ராக்கி படத்தை இயக்கியிருந்தார். மிகவும் ராவாக எடுக்கப்பட்ட அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை அவருக்குப் பெற்றுத்தந்தது. அந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் முன்பே சாணி காயிதம் படத்தில் ஒப்பந்தமாகி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குனர். ராக்கி படத்தில் ரத்தம் தெறிக்க பல வன்முறை காட்சிகள் இடம் பெற்று இருந்தன. குடலை உருவி மாலை போட்டுக் கொள்ளும் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்த படமும் அதே போல பழிவாங்கும் படம்தான் என சாணிக் காயிதம் டீசர் வெளிப்படுத்தியிருந்தது. இதில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 நடிகர் செல்வராகவன்

நடிகர் செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். தமிழ் சினிமா தரத்தை உயர்த்திய இயக்குனர்களில் முக்கியமானவர். சாணி காகிதத்தில் அவரை முதன்மை கதாபாத்திரமாக வைத்து வெளியான பஸ்ட் லுக் போஸ்டர் அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியது. இயக்குனர் செல்வராகவன் நடிகர் செல்வராகவன் ஆனார். அவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியது. இதன் தொடர்ச்சியாகவே இயக்குனர் செல்வராகவன் Beast படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் செல்வராகவன் அதுவும் பழிவாங்கும் கதாபாத்திரம், படம் நிச்சயம் வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சிறந்த நடிகை

சிறந்த நடிகை

" மகாநடி " தெலுங்கு படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பார்ப்பதற்கு லட்சணமான அழகு முகம் உடையவர். தனது க்யூட் நடிப்பால் பல ரசிகர்களை பெற்றவர். சானிக் காயிதம் படத்தில் மேக்கப் இல்லாமல், அழுக்கு துணிகளுடன், அவலட்சணமாக வருவது பார்ப்பதற்கு பயத்தை வர வைப்பது போல இருக்கிறது. தனது வாழ்க்கையை சீரழித்தர்களை பழிவாங்கும் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவருக்கு உதவும் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்திருக்கிறார்.

 அமேசன் பிரைமில் நேரடியாக

அமேசன் பிரைமில் நேரடியாக

இன்று வெளியான சானிக் காயிதம் பட ட்ரெய்லரில் துப்பாக்கி சத்தம், தெறிக்கும் ரத்தம், கத்தியால் குத்தப்படுவது என ஒரே ரணகளம் ஆக படமாக்கியுள்ளனர். போலீசிடம் மண்டியிட்டு இருக்கும் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் தாங்கள் செய்த கொலைகளின் கணக்குகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். செல்வராகவன் சொன்ன கொலைகளின் கணக்கு கீர்த்தி சுரேஷ் சொன்ன கொலைகளின் கணக்கு சரியாக பொருந்தாததால் போலீஸ் கீர்த்தி சுரேஷிடம் கேட்க கீர்த்தி சுரேஷ் அதற்கு சொல்லும் பதில் அதில் உள்ள கோபம், கொலைவெறி அவரை பார்ப்பதற்கு அச்சம் கொள்ள வைக்கிறார். சாணிக் காயிதம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் மே 6ஆம் தேதி நேரடியாக அமேசன் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X