Keerthy Suresh-என்னது கீர்த்தி சுரேஷ் சேலை திருடுவாங்களா?..கடை திறப்பு விழாவில் அவரே சொன்ன விஷயத்தை பாருங்க
சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) கோயம்புத்தூரில் துணி கடையை நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று திறந்துவைத்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

முன்னணி நடிகர்களுடன்: அதன்படி விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்தார். தமிழில் அவர் கமர்ஷியல் படங்கள் நடித்தாலும் தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்றார். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு வரவில்லை.
மீண்டும் தமிழில்: இப்படிப்பட்ட சூழலில் தமிழில் அவர் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் அட்லீயின் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் காரணமாக தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

துணி கடை திறப்பு: இந்நிலையில் கோவையில் ஒரு துணி கடையை திறந்துவைத்தார் கீர்த்தி சுரேஷ். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோயம்புத்தூருக்கு முதன்முறையா கடை திறப்பு விழாவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. கடையை திறக்க வந்த நான் வாடிக்கையாளராக மாறி சில புடவைகளை வாங்கினேன். ஐந்து, ஆறாம் வகுப்பு படிக்கும்போது சேலை அணிந்து கண்ணாடி முன் நின்று ரசித்திருக்கிறேன்.
திருடியிருக்கிறேன்: அதேபோல் திறப்பு விழாவுக்கு வரும்போது அதிகளவு சேலையை வாங்குவேன். சில சமயம் அம்மாவிடம் இருந்து சேலை திருடியும் இருக்கிறேன். ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, ஜெயம் ரவியுடன் சைரன் ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறேன். தற்போதைய காலகட்டத்தி கைத்தறி புடவை மதிப்பு குறைந்திருக்கிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் செயலாற்ற வேண்டும். நமது கலாசாரம் அழிவதை உடனடியாக தடுக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











