ஒவ்வொன்னும் ஒரு விதமா இருக்கே.. கீர்த்தி சுரேஷின் புதிய போட்டோ ஷூட்டை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷின் போட்டோ ஷூட்டை பார்த்து ஜொள்ளுவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
விஜய், சூர்யா, விக்ரம், பவன் கல்யாண், சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

எலும்பும் தோலுமாய்
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். இடையில் அதிகளவு எடை குறைந்து எலும்பும் தோலுமாய் இருந்தார்.

மிஸ் இந்தியா படம்
இதனால் இந்திப் பட வாய்ப்பை இழந்தார் கீர்த்தி சுரேஷ். பின்னர் மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் மிஸ் இந்தியா படம், ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ் ஆனது.

சாணிக் காயிதம்..
தொடர்ந்து நான்கு தெலுங்கு படங்கள், இரண்டு மலையாள படங்கள் மற்றும் தமிழில் செல்வராகவனின் சாணிக் காயிதம் ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள கீர்த்தி சுரேஷ், அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஜம்ப் சூட்டில்
அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிங்க் கலர் ஜம்ப் சூட்டில் ஃப்ரீ ஹேர் விட்டப்படி கன்னத்தில் கை வைத்து எதையோ பார்த்து சிரித்தப்படியும், தரையை பார்த்தப்படியும் குத்த வைத்து அமர்ந்தப்படியும் உள்ளார்.

நாய்க்குட்டியுடன்..
மேலும் பிளாக் அன்ட் வொய்ட் நைட் டிரெஸில் நாய்க் குட்டியுடன் விளையாடும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











